Published : May 12, 2022, 02:33 PM ISTUpdated : May 12, 2022, 03:24 PM IST
Thiruchitrambalam Movie Release Date : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உதயநிதி ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரைப்படமான 'அத்ரங்கி ரே' படத்திலும் நடித்திருந்தார். இதில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்தனர் . இது தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான இது கலாட்டா கல்யாணம் என்னும் பெயரில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
28
dhanush
இதற்கிடையே கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தை நடித்து முடித்திருந்தார் தனுஷ். இந்த படம் கடந்த மார்ச் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.
38
vaathi
டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தெலுங்கில் வாத்தி என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் குறித்த போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதோடு கோலிவுட்டில் கிரே மேன் என்னும் படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.
48
dhanush
தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் குறித்த சுவாரஷ்ய தகவல் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
58
thiruchitrambalam
தற்போது தனுஷ் நடித்துள்ள திருசிற்றம்பலம் படத்தை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
68
thiruchitrambalam
இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
78
thiruchitrambalam
7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அனிருத் - தனுஷ் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
88
thiruchitrambalam
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ''திருச்சிற்றம்பலம்' குறித்து சமீபத்தில் பேசியுள்ள உதயநிதி, வரும் ஜூலை 1 ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.