பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழந்த திருச்சிற்றம்பலம்... தனுஷ் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா...?

First Published | Aug 19, 2022, 7:40 AM IST

Thiruchitrambalam : மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

தனுஷை வைத்து குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர், தற்போது 4-வது முறையாக அவருடன் இணைந்த படம் தான் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷு கண்ணாவும், பிரியா பவானி சங்கரும் நடித்திருந்தனர். அதேபோல் தனுஷின் தோழியாக நித்யா மேனன் நடித்திருந்தார்.

இதுதவிர பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, முனீஸ்காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் கதையை நடிகர் தனுஷ் தான் எழுதி இருந்தார். கடைசியாக நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படம் தான் திரையரங்கில் வெளியானது. அதன்பின் அவரின் 4 படங்கள் வரிசையாக ஓடிடி-யில் வெளியாகின.

Tap to resize

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தனுஷின் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதால் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படமும் அமைந்துள்ளதால், பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... இவள் பெண்ணா.. அல்ல தேவதையா.. வழவழப்பான உடையில் மெல்லிய இடையை லைட்டாக காட்டிய அதிதி ஷங்கர்! கியூட் போட்டோஸ்..!

இந்நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.7 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சி நேற்று காலை 8 மணிக்கு தான் திரையிடப்பட்டது. அதுவே அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டு இருந்தால் படத்தின் வசூல் மேலும் அதிகரித்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. இனி வரிசையாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... திரையரங்குகளுக்கு மக்கள் வராததற்கு காரணம் படங்கள் அல்ல..? நடிகர் மாதவன் பேச்சால் பரபரப்பு..!

Latest Videos

click me!