Maaran movie Stills : மாஸ்டர் ஹீரோயினுடன் மாஸ் லுக்கில் தனுஷ்... இணையத்தை தெறிக்கவிடும் மாறன் பட ஸ்டில்ஸ்

Ganesh A   | Asianet News
Published : Dec 30, 2021, 02:04 PM IST

மாறன் (Maaran) படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோயின் மாளவிகா உடன் நடிகர் தனுஷ் (Dhanush) மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

PREV
18
Maaran movie Stills : மாஸ்டர் ஹீரோயினுடன் மாஸ் லுக்கில் தனுஷ்... இணையத்தை தெறிக்கவிடும் மாறன் பட ஸ்டில்ஸ்

‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த படத்தை  தொடர்ந்து இவர் இயக்கியுள்ள, 'நரகாசுரன்' படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

28

இதையடுத்து அருண்விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடித்த மாஃபியா படத்தை மிகவும் ஸ்டைலிஷாக இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.

38

பின்னர் மணிரத்னம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நவரசா என்கிற வெப் தொடரில் அக்னி என்கிற குறும்படத்தை இயக்கி கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தினார் கார்த்திக் நரேன். அக்குறும்படம் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருந்ததாக அனைவரும் பாராட்டினர்.

48

இந்நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் படம் மாறன். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.

58

இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

68

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

78

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

88

இந்நிலையில், மாறன் படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோயின் மாளவிகா உடன் நடிகர் தனுஷ் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories