மும்பையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி : தமிழ் பாடல் பாடி அரங்கத்தை அதிரவிட்ட தனுஷ்!

Published : May 04, 2025, 03:53 PM IST

மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், தமிழ் பாடலை பாடி அசத்தினார்.

PREV
14
மும்பையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி : தமிழ் பாடல் பாடி அரங்கத்தை அதிரவிட்ட தனுஷ்!

Dhanush Sing a Song in AR Rahman Concert : இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதனால் நாடு முழுவதும் இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகமெங்கும் ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்.

24
மும்பையில் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரி

அந்த வகையில் மும்பையில் நேற்று இரவு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர் அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதை கேட்டு ரசிகர்கள் வைப் ஆகினர்.

34
ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியில் தனுஷ்

இந்த இசை நிகழ்ச்சியில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் நடிகர் தனுஷும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது மட்டுமின்றி, மேடையேறி ஏ.ஆர்.ரகுமான் உடன் சேர்ந்து பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். அதுவும் தமிழ்பாடலை பாடினார் தனுஷ். தனது 50வது படமான ராயன் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் தான் பாடிய அடங்காத அசுரன் பாடலை தான் பாடினார் தனுஷ். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

44
மும்பையில் தனுஷ் பாடிய தமிழ் பாட்டு

தனுஷ் பாடிய தமிழ் பாடல் ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்டில் ஒரு ஹைலைட்டான விஷயமாக மாறியது. அடுத்ததாக தனுஷ் நடித்து வரும் இந்தி படமான ‘தேரே இஸ்க் மெயின்’ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இது ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அப்போது கிடைத்த இடைவெளியின் போது தான் ஏ.ஆர்.ரகுமான் இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார் தனுஷ்.

Read more Photos on
click me!

Recommended Stories