வித்தியாசமான போஸ்டருடன் நன்றி கூறிய தனுஷ்..!

Published : Apr 14, 2021, 12:36 PM IST

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்து வரும் நிலையில், 'கர்ணன்' பட வெற்றிக்காக புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.  

PREV
16
வித்தியாசமான போஸ்டருடன் நன்றி கூறிய தனுஷ்..!

 "கொடியன்குளம்" என்கிற கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது கர்ணன் திரைப்படம். திரைப்படத்தில் பொடியன்குளம் என்று கிராமத்தின் பெயர் வைத்துள்ளதால், இதனை ரசிகர்கள் மிக எளிதாக புரிந்து கொண்டனர்.

26

உண்மை கதைகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில், அதீத வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு இந்த படமும் மிக பெரிய உதாரணமாக அமைந்து, வசூலில் வாரி குவித்து வருகிறது.

36

மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும்... இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

46

படத்தில் குறிப்பிட்ட வருடம் தவறாக இருந்ததால், அதனை சுட்டி காட்டி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதுவும் இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

56

படம் மட்டும் இன்றி, சந்தோஷ் நாராயணன் இசைக்கும்... அவரது இசையில் வெளியாகியுள்ள பாடல்களும் பலரது செல் போன் ரிங் டோனாகவே மாறிவிட்டது. 

66

'கர்ணன்' படத்திற்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதால், ரசிகர்களுடன் இந்த சந்தோஷத்தை கொண்டாட முடியவில்லை. தமிழ் புத்தாண்டு தினமான இன்று, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வித்தியாசமான போஸ்டருடன் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

click me!

Recommended Stories