Dhanush: விருதை விட தனுஷின் பதில்தான் இப்போது டிரெண்டிங்... என்ன சொன்னார் தெரியுமா?

Published : Jul 27, 2026, 09:34 AM IST

Dhanush response is trending more than the award: தனுஷ் செய்த சம்பவத்தால் விருது குறித்த சர்ச்சை காணாமல் போனது. ஆனால் அவரின் பேச்சு தனுஷ் அரசியலில் கால் பதிக்க போகிறாரோ என்ற எண்ணத்தை விதித்துள்ளது.

PREV
15
தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நடிகர் தனுஷின் 'ராயன்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த தமிழ் திரைப்பட விருது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, மெய்யழகன் மற்றும் மகாராஜா போன்ற படங்கள் விருதுக்கு தகுதியானவை என்ற கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டன.

இந்த விமர்சனங்களுக்கு தற்போது முதல் முறையாக பதிலளித்துள்ள தனுஷ், விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகவும், இந்த அங்கீகாரம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

25
நாம தேடி போகல, நம்மை தேடி வந்துள்ளது

இது குறித்து பேசிய அவர், “ராயனை விட சிறந்த தமிழ் திரைப்படங்கள் இருந்தன என்பது உண்மை. ஆனால் சில விஷயங்கள் நம்மைத் தேடி இயல்பாக வந்து சேரும். அதுபோலத்தான் இந்த விருதும் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

35
ஒரு தமிழ் நடிகருக்கு இரண்டு தேசிய விருதுகள்

மேலும், “ஒரே ஆண்டில் ஒரு தமிழ் நடிகருக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதை அனைவரும் கொண்டாட வேண்டும். இதை எதிர்மறையாக பார்க்காமல், தமிழ் சினிமாவின் வெற்றியாக பார்க்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

45
படத்துக்கு விமர்சனமல்ல, விருதுக்கு விமர்சனம்

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியான நிலையில், தனுஷின் இந்த பணிவான பதில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், சிலர் அவரின் நேர்மையான கருத்தை பாராட்டியுள்ளதுடன், மற்றொரு தரப்பு தேசிய விருது தேர்வு முறையைப் பற்றிய விவாதத்தையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

55
தனுஷுக்கு சிறப்பு நடிகர் அங்கீகாரமும்

இதற்கிடையில், 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதுடன், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு சிறப்பு நடிகர் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories