அமெரிக்கா பறக்கும் முன்பு அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்... வைரல் போட்டோ...!

First Published Feb 9, 2021, 3:33 PM IST

ஒரே நாளில் தனுஷ் பற்றி கசிந்துள்ள இரண்டு அப்டேட்கள் அவருடைய ரசிகர்களை செம்ம குஷியில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கிட்டதட்ட ஓடிடியில் இந்த படம் வெளியாக உள்ளது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. என்னதான் தனுஷுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் படத்தை தியேட்டரில் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பெரும் தொகை கொடுக்க தயாராக இருப்பதால் தயாரிப்பாளர் ஓடிடி பக்கம் சாய்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
undefined
அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி தாணுவின் வி.கிரியேஷன்ஸ், தனுஷ் உடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனது முதல் படமான “பரியேறு பெருமாள்” படத்திலேயே தமிழ் சினிமாவை உற்று நோக்க வைத்த மாரி செல்வராஜ் தான் இந்த படத்தை இயக்குகிறார்.
undefined
இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.தற்போது கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளையும் தனுஷ் முடித்துவிட்டதாக வெளியாகியுள்ள லேட்டஸ்ட் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கும் வர என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
undefined
ஒரே நாளில் மற்றொரு செய்தியாக தனுஷ் நடிக்க உள்ள ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக நாளை அமெரிக்கா செல்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் 'தி கிரே மேன்' படத்தில் நடிக்க அமெரிக்கா செல்கிறார்.இந்த படத்தை கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், அவென்சர்ஸ் என்ட்கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்குகிறார்கள்.
undefined
இப்படத்தில் ஜூலியா பட்டர்ஸ், ஜெசிக்கா ஹென்விக், அனா டி ஆர்மஸ், ரியான் கோஸ்லிங், வாக்னர் மோரா, ஆகிய ஹாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.
undefined
இரண்டு மாதங்கள் ஹாலிவுட் படப்பிடிப்பில் பங்கேற்கும் தனுஷ், அதன் பின்னர் மே மாதம் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாராம். வந்த வேகத்தில் கார்த்திக் நரேனின் #D43 படத்திற்கான 2ம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.
undefined
click me!