Dhanush Political Entry : தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய அப்பா கஸ்தூரிராஜா

Published : Jun 01, 2026, 10:30 AM IST

Dhanush Political Entry : தனுஷின் 55-வது திரைப்படத்தில் மம்மூட்டியுடன் மற்றுமொரு பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ள நிலையில், தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தந்தை கஸ்தூரிராஜா பேசியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
13
இரண்டு செய்திகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், பான்-இந்தியா நடிகராகவும் வலம் வரும் தனுஷ் குறித்து அடுத்தடுத்து இரண்டு முக்கிய செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் அவரது 55-வது படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் அவரது தந்தை மற்றும் இயக்குநருமான கஸ்தூரிராஜா தனுஷின் அரசியல் வருகை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

23
தனுஷ் 55-ல் இணையும் மலையாள நடிகர்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷின் 55-வது திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' மற்றும் 'ஆர் டேக் ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அப்யன்கர் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சுவாரசியமான சேர்க்கையாக, சமீபத்தில் தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த 'கருப்பு' திரைப்படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய மூத்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கான காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

33
தனுஷ் அரசியலுக்கு வருவாரா?

சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம், "போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் வருங்காலத்தில் அரசியலுக்கு வருவாரா?" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்:

"யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ அல்லது பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம்தான், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம். வருங்காலத்தில் தனுஷின் மகன்களும் சினிமாவுக்கு வரலாம், இப்போது என் மகள் வழிப் பேரன் பவிஷ் நடித்து வருகிறார்" என்று கூறினார்.

மேலும், தனுஷ் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் பெருமை குறித்துப் பேசுகையில், "தனுஷின் நிஜப் பெயர் வெங்கடேச பிரபு. சினிமாவுக்காக அவர் தனுஷ் என மாற்றிக்கொண்டார். ஆனால், இப்போது விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அவரை 'தனுஷ் கே ராஜா' (Dhanush K Raja) என்றுதான் அழைக்கிறார்கள். என் பெயரோடு சேர்த்து அவர் பெயர் ஒலிப்பது எனக்கு மிகுந்த பெருமை" என்றார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories