இன்பன் உதயநிதி வெளியிடும் முதல் படத்துக்கே இந்த நிலைமையா? முன்பதிவில் காத்துவாங்கும் இட்லி கடை..!

Published : Sep 29, 2025, 04:05 PM IST

இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யும் தனுஷின் இட்லி கடை திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

PREV
14
Idli Kadai Ticket Booking Lags

தனுஷ் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'இட்லி கடை'. தனுஷின் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். சூப்பர்ஹிட் படமான 'திருச்சிற்றம்பலம்' படத்திற்குப் பிறகு தனுஷ் - நித்யா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. தனுஷ் இயக்கும் நான்காவது படம் இது. ஷாலினி பாண்டே மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

24
இட்லி கடை டிக்கெட் முன்பதிவு

கடந்த செப்டம்பர் 27-ந் தேதியே இட்லி கடை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டாலும், இரண்டு நாட்கள் ஆகியும் வெறும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் விற்பனை ஆகி உள்ளது. இட்லி கடை படத்தின் டிக்கெட் முன்பதிவு இவ்வளவு மந்தமாக இருப்பதற்கு கரூர் சம்பவமும் ஒரு காரணம். இரு தினங்களாக கரூர் சம்பவத்தை பற்றி தான் அனைவரின் கவனமும் உள்ளது. இதனால் இட்லி கடை படத்திற்கு டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என தனுஷ் ரசிகர்களே சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி தான் தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்கிறார். திமுக மீது இருக்கும் வெறுப்பாலும் டிக்கெட் முன்பதிவு பாதிப்படைந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

34
ஆடியன்ஸ் கையில் தான் ரிசல்ட்

சிலர் படத்தின் ரிலீசை தள்ளிவைக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடர் விடுமுறை வருவதால் படம் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பில்லை. படத்தின் ரெஸ்பான்ஸை பொறுத்து தான் இப்படத்தின் ரிசல்டும் இருக்கும் என கூறப்படுகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை பிரசன்னா ஜி.கே., தயாரிப்பு வடிவமைப்பை ஜாக்கி, சண்டைக்காட்சிகளை பி.சி. ஸ்டண்ட்ஸ், நடன அமைப்பை பாபா பாஸ்கர், ஆடை வடிவமைப்பை காவ்யா ஸ்ரீராம், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையை பிரவீன் டி, ஒப்பனையை பி. ராஜா, ஸ்டில்ஸை தேனி முருகன், விளம்பர வடிவமைப்பை கபிலன் மற்றும் மக்கள் தொடர்பை ரியாஸ் கே. அஹ்மத் ஆகியோர் கவனிக்கின்றனர்.

44
தனுஷ் இயக்கும் 4வது படம்

தனுஷ் இயக்கிய படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றவை. 'ப. பாண்டி', 'ராயன்' ஆகியவை தனுஷ் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான படங்கள். 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படமும் அவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி பெரும் கவனம் ஈர்த்தது. தனுஷ் கதாநாயகனாக கடைசியாக நடித்த படம் 'குபேரா'. சேகர் இயக்கிய இந்தப் படம், உலக பாக்ஸ் ஆபிஸில் 132 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் பட்ஜெட் சுமார் 120 கோடி ரூபாய் ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories