Theatre Releases : ஓம் படத்திற்கு ஆப்பு வைக்க இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 13 படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

Published : Nov 25, 2026, 09:03 AM IST

This Week Theatre Release Tamil Movies : நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் டெலிவரி பாய், நெல்லை பாய்ஸ் உள்பட மொத்தம் 13 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள்

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புதிய திரைப்படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாக ஒரு வாரத்தில் 4 முதல் 6 படங்கள் திரைக்கு வந்தாலே அவற்றுக்குத் தேவையான திரையரங்குகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகர்களின் படங்களும் தியேட்டர்களைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்கின்றன.

இப்படியான சூழலில், வரும் நவம்பர் 27-ம் தேதி ஒரே நாளில் சுமார் 13 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன. இந்த அறிவிப்பு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கு இந்தப் புதிய வெளியீடுகள் கடும் போட்டியாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் வெளியான தனுஷின் 'ஓம்' திரைப்படம், கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' உள்ளிட்ட படங்களின் திரையரங்கு நிலவரம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

24
நவம்பர் 27-ல் வெளியாகும் 13 திரைப்படங்கள்!

வரும் நவம்பர் 27-ம் தேதி 'மின்னும் ஓர் இரவு', 'டெலிவரி பாய்', 'சிட்டுக்குறிஞ்சி', ‘நிறம்’, '606', 'ஜெடூசி', 'கோ 2 கோ', 'மௌன மொழிகள்', 'மதுர மோசடி', 'பேய் பிடிச்சிருக்கு', 'நெல்லை பாய்ஸ்', 'சிக்னல் அட் 11:30' 'வட மஞ்சுவிரட்டு' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13 படங்கள் ஒரே வாரத்தில் திரைக்கு வரவுள்ளதால், இந்த ஆண்டின் தமிழ் திரைப்பட வெளியீட்டு எண்ணிக்கையும் 200-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திரைப்படங்களும் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் காரணமாக சில படங்கள் தங்களது வெளியீட்டை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கவும் வாய்ப்புள்ளது.

34
ஓம் உள்ளிட்ட படங்களின் திரையரங்கு நிலை என்ன?

கடந்த வாரம் வெளியான தனுஷின் 'ஓம்' திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. இதனால் படத்தின் வசூல் மற்றும் திரையரங்கு எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், 'ஓம்' படத்துடன் வெளியான விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', கீர்த்தி சுரேஷின் 'சத்தியவான் சாவித்திரி' ஆகிய படங்களும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுவதில் சவால்களைச் சந்தித்து வருகின்றன.

தற்போது அடுத்த வாரம் 13 புதிய படங்கள் வரிசையாக வெளியாக உள்ளதால், ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்குக் கிடைத்துள்ள ஸ்கிரீன்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய படங்களுக்கு அதிகமான திரையரங்குகளை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், 'ஓம்' உள்ளிட்ட படங்களின் வசூலும் மேலும் பாதிக்கப்படலாம்.

44
13 படங்கள் வந்தாலும் போட்டி இருக்குமா?

மறுபுறம், வெளியாக உள்ள 13 திரைப்படங்களிலும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் இல்லாததால், அனைத்துப் படங்களுக்கும் சமமான ரசிகர்கள் வரவேற்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அவற்றின் கதைக்களம், விளம்பரம், விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆகியவையே திரையரங்குகளில் அவற்றின் நிலையைத் தீர்மானிக்கும்.

இதனால் நவம்பர் 27-ம் தேதி வெளியாகவுள்ள புதிய படங்கள் எந்த அளவுக்கு ரசிகர்களைக் கவரப்போகின்றன என்பதுடன், ஏற்கனவே திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Highest Grossing Movies : 2026-ல் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 6 படங்கள்.. இந்த லிஸ்ட்டில் உள்ள ஒரே ஒரு தமிழ் படம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories