டில்லி VS ரோலக்ஸ் ..மாஸ் கதையுடன் ரெடியாகும் கைதி 2

First Published Jun 11, 2022, 2:59 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் தனது அடுத்த படத்தை முடித்ததும், 'கைதி' 2 படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

KAITHI

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய கைதியை கார்த்தி மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  ஒரு இரவு அதிரடி நாடகமான இதன் மூலம் அனைவரையும் தன் பக்கம் திருப்பினார் லோகேஷ். இதையடுத்து விஜயின் மாஸ்டர், கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ' விக்ரம் ' திரைப்படம் 'கைதி'யின் தொடர்ச்சியாக லோகேஷுக்கு வெற்றிகளை குவித்தது. மேலும் இயக்குனரின் படங்களில் இருந்து ஜொலிக்கும் நட்சத்திரங்களை எதிர்பார்க்கலாம் என நம்பிக்கை கொடுத்துள்ளது.. 

karthi

விக்ரம் படத்தின் கொண்டாட்டத்தில் இருக்கும் இயக்குனரிடம் விஜய் 67 மற்றும் கைதி 2 படம் குறித்த கேள்விகள் எழும்பியுள்ளது.  ' கைதி 2 ' படத்தின் தயாரிப்பாளர்களின் திட்டம் இதோ . சமீபத்தில் ஒரு பேட்டியில், லோகேஷ் கனகராஜ், 'கைதி 2' படத்திற்கான தனது யோசனையைப் பகிர்ந்து கொண்டார். அதில் , டில்லி (கார்த்தி) ஒரு கபடி வீரர், அவர் சிறையில் இருந்தபோது நடத்தப்பட்ட போட்டிகளில் பல கோப்பைகளை வென்றார். 'கைதி' படத்தின் க்ளைமாக்ஸில் கார்த்தி தனது மகளுடன் ஒரு பையுடன் நடந்து செல்கிறார், அந்த பையில் அவரது கோப்பைகள் அனைத்தும் உள்ளன. இதற்கான முன்னுரை 'கைதி 2' படத்தின்  அமைக்க வேண்டும், மேலும் படத்தில் டில்லி (கார்த்தி) மற்றும் ரோலக்ஸ் (சூர்யா) இடையேயான மோதலும் இருக்கும் என குறிப்பிட்டார்.

kaithi

இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் தனது அடுத்த படத்தை முடித்ததும், 'கைதி' தயாரிப்பாளர்கள் படத்தின் வேலைகளை கிக்ஸ்டார்ட் செய்ய திட்டமிட்டுள்ளனர், மேலும் 'தளபதி 67' படத்திற்காக 'மாஸ்டர்' ஜோடி மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. கைதி 2 படத்தின் பட்ஜெட் முதல் பாகத்தை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும், மேலும் இந்த படம் நடிகரின் 25 வது படமாக இருக்கலாம்.

click me!