தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த தசரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ளாராம் கீர்த்தி.
அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் மாத இறுதியில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தசரா படத்தின் புரமோஷனின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த லுக் என குறிப்பிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.