தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் இந்த ஆண்டில் மட்டும் குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஸ்க் மெயின் ஆகிய 3 படங்களை வெளியிட்டார். இதில் குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை. ஹிந்தியில் வெளியான Tere Ishk Mein என்ற படம் ஓரளவு வசூல் கொடுத்தது. இந்த படங்களின் கலெக்ஷன் மற்றும் விமர்சனம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆண்டு தனுஷிற்கு சற்று ஏமாற்றமான ஆண்டாக அமைந்துள்ளது.
24
GV Prakash Dhanush D54
இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது 54ஆவது படமான டி54 படத்தில் நடித்து வந்தார். போர் தொழில் என்ற த்ரில்லர் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் D54. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
34
D54 Shooting Update Tamil
இந்த படத்தில் தனுஷ் தனது ஸ்டைலை மாற்றி நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட், ஆக்சன் கலந்த கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மிக குறுகிய காலத்தில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பாடலை ஜிவி மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து ஒரு பாட்டினை உருவாக்கும் காட்சியை வீடியோ மூலம் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வந்தது.
44
Dhanush D54 Movie
போர் தொழிலை மையப்படுத்திய படமாக இந்தப் படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெளியான படங்கள் தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இந்தப் படம் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் டி54 படத்தின் டைட்டில், டீசர், பர்ஸ்ட் லுக், டிரைலர், சாங்ஸ், இசை வெளியீட்டு விழா என்று ஒவ்வொரு அப்டேட்டாக வெளிவரும் என்று தெரிகிறது. 2026ஆம் ஆண்டு தனுஷ் வெற்றியோடு தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்ததைத் தொடர்ந்து படக்குழுவினருடன் தனுஷ் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.