2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடி வரும் ஹர்திக் பாண்டியா, மிகக்குறுகிய காலத்தில் தனது அபாரமான திறமையாலும், சிறப்பான பங்களிப்பாலும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தவர்.
ஹர்திக் பாண்டியாவும் செர்ஃபியன் நாட்டைச் சேர்ந்த நடிகை ஒருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த அவர், ஒருநாள் தனது காதலை இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தார்.
அதன் பின்னர், செர்ஃபியாவைச் சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்குடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிவித்த ஹர்திக் பாண்டியா, நிச்சயதார்த்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
ஹர்திக் பாண்டியா - நடாஷா திருமணம் லாக்டவுனில் எளிமையாக நடந்து முடிந்தது. அத்துடன் சேர்த்து ரசிகர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியையும் சொல்லி குஷியாக்கினார்.
தனது மனைவிநடாஷா கர்ப்பமாக இருப்பதை ஹர்திக் பாண்டியா உறுதி செய்தார். தான் விரைவில் தந்தையாக போகும் மகிழ்ச்சியை அனைவருக்கும் தெரிவித்து மகிழ்ந்துள்ளார்.
எங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோம். புதிதாக ஒருவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்க உள்ளோம். உங்களது ஆசீர்வாதங்கள் தேவை என்று ஹர்திக் பாண்டியா பதிவிட்டிருந்தார்.இதற்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஹர்த்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹர்த்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் பிஞ்சு விரல்களை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ஹர்திக் பாண்டியா, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் பிஞ்சு விரல்களை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ஹர்திக் பாண்டியா, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.