ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கையில் எத்தனையோ இயக்குநர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். அதில், முக்கியமாக இப்போது இளம் இயக்குநருக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த ரஜினிகாந்த் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்தார்.
26
ரஜினிகாந்த்
இப்போது கூலி படத்தில் நடித்துள்ள நிலையில் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பும் சைடு பை சைடாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, மிர்ணா மேனன், அண்ண ராஜன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஷிவராஜ் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
36
பூஜா ஹெக்டே
இந்த நிலையில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வெளியாக இன்னும் 26 நாட்களில் வெளியாக இருக்கிறது. இன்றைய ரசிகர்களுக்கு ஒரு படம், எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படியெல்லாம் ரஜினியை ஆட்டம் போட வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.
46
மோனிகா லிரிக் வீடியோ
இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் இடம் பெற்ற 3 ஆவது லிரிக் பவர் ஹவுஸ் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் இடம் பெற்ற கூலி டிஸ்கோ, சிக்கிட்டு, மோனிகா ஆகிய பாடல்கள் லிரிக் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இப்போது அடுத்தாக பவர்ஹவுஸ் என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாக இருக்கிறது.
56
கூலி ரிலீஸ் தேதி
இப்படி ஒவ்வொரு வாரமும் படம் தொடர்பாக அப்டெட் வந்து கொண்டிருக்கும் நிலைய்ல் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஜெயிலர் படத்தில் தமன்னா ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடியிருக்கிறார்.
66
அனிருத், கூலி படத்தின் பாடல்கள்
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கிட்டத்தட்ட ரூ.350 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரஜினிகாந்திற்கு ரூ.150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதே போன்று, இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு ரூ.50 கோடி, நாகர்ஜூனா ரூ.24 கோடி, சிறப்பு தோற்றத்தில் வரும் அமீர் கான் ரூ.30 கோடி, பூஜா ஹெக்டே ரூ.2 கோடி என்று பிரபலங்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.