தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவர் இசையில் தற்போது வரிசையாக நான்கு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் முதலாவதாக விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அனிருத் கைவசம் உள்ள பிரம்மாண்ட திரைப்படம் கூலி. அப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கான அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
24
வரவேற்பை பெறும் கூலி பட பாடல்கள்
அந்த வகையில் கூலி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய சிக்கிட்டு வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து கடந்த வாரம் கூலி படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலாக மோனிகா என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் உடன் சேர்ந்து பூஜா ஹெக்டேவும் குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இன்ஸ்டாவை திறந்தாலே இந்த பாடல் தொடர்பான ரீல்ஸ் வீடியோக்கள் தான் வரிசைகட்டி நிற்கின்றன.
34
கூலி 3-வது சிங்கிள்
கூலி படத்தின் இரண்டு பாடல்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக அப்படத்தின் 3வது பாடல் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. பவர் ஹவுஸ் என பெயரிடப்பட்டுள்ள அப்பாடல் வருகிற ஜூலை 22-ந் தேதி ஐதராபாத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். அப்பாடலுக்காக அனிருத்தின் இசை நிகழ்ச்சியும் ஐதராபாத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் கூலி பட பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் லைவ் ஆக பர்பார்ம் செய்து காட்ட உள்ளாராம் அனிருத். இந்த விழாவில் நடிகர் நாகர்ஜுனா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்களாம்.
அனிருத் ஐதராபாத்தில் கூலி பட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதை அறிந்த ரசிகர்கள் இது காவ்யா மாறனின் பேவரைட் சிட்டியாச்சே என கமெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் காவ்யா மாறனும் அனிருத்தும் காதலிப்பதாக வதந்தி பரவியது. பின்னர் இது உண்மையில்லை என அனிருத் விளக்கம் அளித்தார். காவ்யா மாறன் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்கிற அணியை நிர்வகித்து வருகிறார். அதனல் அவரின் பேவரைட் சிட்டியான ஐதராபாத்தில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுவது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. கூலி திரைப்படத்தை காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறன் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.