சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இடையே கடும் விவாதம். மாறனின் கடுமையான விமர்சனத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் உருவான “கூலி” படம், உலகம் முழுவதும் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்குப் பின் வந்த இந்தப் படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படம் குறித்து பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சேனலில் வெளிப்படுத்திய கடுமையான கருத்துக்கள், ரஜினி ரசிகர்களை தீவிர கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
26
“இது தான் கதையா?”
படத்தின் கதையை சுருக்கமாகச் சொல்வதோடு, “இது தான் கதையா?” என்று சாடிய மாறன், பான்-இந்தியா படமென்றால் இந்தியா முழுவதும் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் எனவும், நடிகர்களை சேர்த்து வைப்பதாலே அது பான்-இந்தியா படம் ஆகாது எனவும் தாக்கியுள்ளார். மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜை நோக்கி “கொலை, கஞ்சா, பவுடர் கதைகளையே மட்டுமே தெரிந்தவர்தான் இவர்” எனக் கடுமையாக விமர்சித்தார்.
36
நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை
அவரது விமர்சனத்தில் நடிகர்களையும் விட்டுவைக்கவில்லை. நாகார்ஜுனா, சௌபின், உபேந்திரா ஆகியோரின் கதாபாத்திரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும், “அமீர் கான் காமியோவில் வந்து பீடியைப் பற்றிப் பேசுகிறார்; இதனால் ‘ஜெயிலர்’ படம் தான் நல்ல படமாய் தெரிகிறது” எனவும் அவர் கிண்டலிட்டா
"காட்டு மொக்கை என நினைத்தால் பிடிக்கவே பிடிக்காது"
மாறனின் கடைசி வரிகள் ரசிகர்களை சுடச்சுடக் கொதிக்க வைத்தது – “இதை சாதாரண ‘மொக்கை’ படம் என்று நினைத்துப் பார்த்தால் சராசரியாகத் தோன்றும்; ஆனால் ‘காட்டு மொக்கை’ என்று நினைத்துப் பார்த்தால், பிடிக்கவே பிடிக்காது” என்று கூறினார்.
56
ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
இதனால் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, மாறனுக்கு எதிராக பலத்த பதிலடி கொடுத்து வருகின்றனர். “ரஜினியின் மாஸ் மொமண்ட்ஸ் சூப்பராகவே இருந்தது, ரசிகர்களுக்கு படம் நன்றாகவே கனெக்ட் ஆகியிருக்கு” என்று பலரும் தெரிவித்துள்ளனர். பொதுவான பார்வையாளர்கள் சில இடங்களில் படம் டல் போல இருந்ததாகச் சொன்னாலும், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
66
விமர்சனமும் ஒரு விளம்பரம் தானே.?!
இவ்வாறு, ஒரு பக்கம் ப்ளூ சட்டை மாறனின் கடுமையான விமர்சனம், மறுபக்கம் ரசிகர்களின் கொண்டாட்டம் – இரண்டும் சேர்ந்தே “கூலி” படம் சினிமா உலகில் சூடுபிடித்த விவாதமாக மாறியுள்ளது.