கூலி படத்தில் வில்லியாக நடித்து பேமஸ் ஆன ரச்சிதா ராம், தற்போது பாடி ஷேமிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் மாஸான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை ரச்சிதா ராம். அப்படத்தில் வில்லன் ஷோபின் ஷாகிர் மனைவியாக நடித்திருந்தார். கூலி படத்திற்கு பின்னர் நடிகை ரச்சிதா ராமிற்கு லேடி சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. தற்போது கன்னட திரையுலகில் செம பிசியாக நடித்து வருகிறார் ரச்சிதா ராம்.
24
பாடி ஷேமிங் பற்றி பேசிய ரச்சிதா ராம்
அவர் நடிப்பில் தற்போது 'கல்ட்' என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. அதன் புரமோஷனின் போது பாடி ஷேமிங் குறித்து பேசினார் ரச்சிதா. தானும் பாடி ஷேமிங்கை எதிர்கொண்டதாகவும், அதை திறமையாக கையாண்டதாகவும் கூறினார். பாடி ஷேமிங் கேள்விக்கு டிம்பிள் குயின் ரச்சிதா ராம் தைரியமாக பதிலளித்தார். 'பெண்கள் ஏன் குண்டாகிறார்கள்? அவர்களின் உடல்நலப் பிரச்சனைகள் என்ன?' என்பது பற்றி பேசினார். 'யார் என்ன சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்' என்றார்.
34
மற்றவர்களை திருப்திப்படுத்த முடியாது
உடல் கேலிக்கு உள்ளாகி தற்கொலை செய்பவர்களை 'முட்டாள்கள்' என ரச்சிதா ராம் கூறியுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பும் வேறுபட்டது. பிசிஓடி, மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடல் எடை கூடும் என்றார். "மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களை திருப்திப்படுத்த முடியாது. இது எங்கள் வாழ்க்கை, எங்கள் உடல், எங்கள் விருப்பம்" என ரச்சிதா ராம் கூறியுள்ளார்.
நம் உடலை நாம் மதிக்க வேண்டும் என ரச்சிதா ராம் கூறினார். "மற்றவர்கள் சொல்வதற்காக ஏன் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டும்? அவரவர் தேவை அவரவருக்குத் தெரியும். தூக்கம் போன்ற பழக்கங்கள் கூட உடல் எடையை பாதிக்கும்" என்றார். "பாடி ஷேமிங்கால் தற்கொலை செய்பவர்கள் முட்டாள்கள். எதிர்மறை கருத்துகளுக்கு ஏன் செவிசாய்க்க வேண்டும்? நேர்மறையான விஷயங்கள் நிறைய உள்ளன" என ரச்சிதா ராம் கூறினார். அவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.