அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரத்தைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
விஜய் - அஜித் இருவருமே சமகாலத்தில் அறிமுகமாகி சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்கள் என்பதால், அவர்களது படங்களுக்கு இடையேயான ஒப்பீடு என்பது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்டை உருவாக்கிய நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவர் நடித்த கில்லி படம் கடந்த 2024-ம் ஆண்டு ரீ-ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் மற்ற முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களை போட்டி போட்டு ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். இருந்தாலும் கில்லி ரீ-ரிலீஸ் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாமல் இருந்து வந்தது.
24
மங்காத்தா ரீ-ரிலீஸ்
இந்த நிலையில் விஜய்யின் கில்லி ரீ-ரிலீஸ் சாதனையை தகர்க்கும் முனைப்போடு, நடிகர் அஜித்தின் 50வது படமான மங்காத்தா, திரையரங்குகளில் நேற்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. நேற்று வெளியான புதுப் படங்களைக் காட்டிலும் ரீ-ரிலீஸ் ஆன அஜித்தின் மங்காத்தா படத்திற்கு தான் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய மங்காத்தா டீமோடு சென்று, அப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்தார். அப்போது அஜித் ரசிகர்கள் அவரிடம் முன்வைத்தது ஒரே ஒரு கேள்வி தான், மங்காத்தா 2 எப்போ வரும் என்பது தான்.
34
மங்காத்தா 2 எப்போ வரும்?
அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ஏகே சார் எப்போ ஓகே சொல்கிறாரோ உடனே மங்காத்தா 2 வரும் என கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வழக்கமாக அஜித்தின் பேனருக்கும் பாலபிஷேகம் செய்யும் ரசிகர்கள், இந்தமுறை மங்காத்தா ரீ-ரிலீஸின் போது கேம்பா கோலாவை வாங்கி வந்து அதில் அபிஷேகம் செய்தனர். இப்படத்திற்காக திரையரங்குகளின் முன் மேள தாளம் முழங்க ஆட்டம் போட்டது மட்டுமின்றி பட்டாசு வெடித்தும் அமர்க்களப்படுத்தி இருந்தனர் அஜித் ரசிகர்கள். திரையரங்குகளில் மங்காத்தா ரீ-ரிலீஸுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், மங்காத்தா ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அஜித் படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது. ரீ-ரிலீஸ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையை கில்லி படைத்திருந்த நிலையில், அதை மங்காத்தா முறியடித்து உள்ளது. கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆனபோது முதல் நாள் தமிழகத்தில் 2.9 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் மங்காத்தா படம் முதல் நாளில் 3.1 கோடி வசூலை வாரிசுருட்டி கில்லி சாதனையை முறியடித்து உள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் அஜித்குமார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.