cook with comali 3 : ஆரம்பமே சர்ச்சையா... ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த முதல் எபிசோடு- அப்படி என்ன தான் ஆச்சு?

First Published | Jan 25, 2022, 9:51 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 2 சீசன்களில் கலக்கிய புகழ், இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. அவ்ருக்கு பதிலாக சூப்பர் சிங்கர் பிரபலம் பரத் களமிறக்கப்பட்டு உள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஸ், ரேகா,  உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் வனிதா முதல் பரிசை வென்றார். 

அதேபோல் இரண்டாவது சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் கனி இறுதிப்போட்டியில் வென்றார். இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இரண்டு சீசன்களிலும் கலக்கினர். 

Tap to resize

வெற்றிகரமாக இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில், விரைவில் 3-வது சீசன் தொடங்கி உள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் மனோபாலா, வித்யூலேகா, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், ஆண்டனி தாசன் ஆகியோர் போட்டியாளர்களாக அறிமுகமானார்கள். அதேபோல் கோமாளிகளும் அறிமுகப்படுத்தப்பட்டனர். 

கடந்த 2 சீசன்களில் கலக்கிய புகழ், இந்த சீசனில் கலந்துகொள்ளவில்லை. அவ்ருக்கு பதிலாக சூப்பர் சிங்கர் பிரபலம் பரத் களமிறக்கப்பட்டு உள்ளார். இதில் பரத்தை நடுவர் வெங்கடேஷ் பட், துரத்தி சென்று அடிக்கும் படியான காட்சி இடம்பெற்று இருந்தது. இந்தக்காட்சி ரசிகர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கோமாளிகளை அடிப்பதை குறைத்துக் கொண்டால் நல்லா இருக்கும் என நெட்டிசன்கள் சிலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இதற்கு விளக்கமளித்து வெங்கடேஷ் பட் பதிவிட்டுள்ளதாவது: இதை ஒரு டிவி ஷோவாக பாருங்கள். இவை அனைத்தும் உங்களை மகிழ்விக்கும் நோக்கத்தில் மட்டுமே செய்யப்படுகிறது. சிலரை அது காயப்படுத்தி இருக்கலாம், ஆனால் உண்மையில் எங்களது நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்படவில்லை. ஜாலியாக பாருங்கள். டேக் இட் ஈஸி” என கூறி உள்ளார். 

Latest Videos

click me!