சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவிற்கு, வெள்ளித்திரை வாய்ப்பை பெற்று தந்தது என்றால் அது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பின், ரசிகர்கர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக மாறி விட்டார் தர்ஷா.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சுமாராக சமையல் செய்தாலும், தன்னுடைய அழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதே நேரத்தில் புகழுடன் இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.
தற்போது, ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, லாக் டவுன் பிறப்பிக்க பட்டுள்ளதால், தன்னால் முடிந்த உதவிகளை சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு செய்து வருகிறார்.
மக்களின் அன்றாட தேவையான உணவு பொட்டிலன்களை தான் தர்ஷா குப்தா வழங்கி வருகிறார்.
இவரது உதவி மனப்பான்மையை பார்த்து இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள்.
ஏழைகள் பசி அறிந்து உணவு அளிப்பது மிகப்பெரிய சேவையே
தினம் தோறும் காரில் சென்று உணவு பொட்டிலங்கள் வழங்கும் தர்ஷா
கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் மாஸ்க் அணிந்து உதவிக்கரம்
பாராட்டுகளை குவிக்கும் தர்ஷா குப்தாவின் சேவை
கோயம்பேடு பகுதியில் சாப்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவிய தருணம்
சாப்பாடு மட்டும் இன்றி, பிஸ்கட் போன்றவற்றையும் வழங்கி வருகிறார்
தினம் தோறும் தொடரும் இவரது சேவைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.