அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.