தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சமந்தா தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி வந்தார். எனவே இவரை பார்த்து பொறாமை படுபவர்களும் உண்டு. திருமணத்திற்கு பின் சமந்தா அக்கினேனி என கணவர் குடும்ப பெயரை தனது பெயருடனும் இணைத்து கொண்டார்.
இந்நிலையில் திடீரென கணவர் குடும்ப பெயரை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்க, கணவரை விட்டு பிரிகிறார் என்றும், விவாகரத்து போவதாகவும் சில வதந்திகள் பரவ துவங்கியது.
இந்த சர்ச்சை குறித்து, கணவன் - மனைவி இருவருமே எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில், சமீபத்தில் இருவரும் இணைந்து கோவாவில் பண்ணை வீடு ஒன்றை கட்டி வருவதாகவும் கூறப்பட்டது. எனவே தங்களுடைய செயல் மூலம் சமந்தா - நாக சைதன்யா பதிலடி கொடுத்ததாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் இவர்களது விவாகரத்து விவகாரம் சமூக வலைத்தளத்தில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், சாமான்யா - நாக சைதன்யா இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே நாகர்ஜுனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றபோதும் முடியாமல் போனதால் இருவரும் விவாகரத்து முடிவை நாடியுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது தெலுங்கு மீடியாக்களில், சமந்தா - நாகசைதன்யா இருவரும் விவாகரத்து கூறி, குடும்ப நல நீதி மன்றத்தை அணுகியுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வரை இந்த விவகாரம் குறித்து சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருமே வாய் திறக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.