
கவுண்டமனி - செந்தில், நாகேஷ், வடிவேலு, விவேக் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நகைச்சுவை நடிகர் என்றால் அது சந்தானம் தான். இவர் கடந்த 1980ம் ஆண்டு ஜனவரி 21ந் தேதி சென்னையில் பிறந்தார். இவர் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகும் முன்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் புதுப்படங்களை தன்னுடைய பாணியில் கலாய்த்து ஸ்பூஃப் செய்து வந்தார்.
லொள்ளு சபா நிகழ்ச்சியில் சந்தானத்தின் காமெடியால் இம்பிரஸ் ஆன சிம்பு அவரை தன்னுடைய வல்லவன் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தினார். அப்படம் ஹிட்டான பின்னர் சந்தானத்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஹீரோயின் இல்லாமல் கூட படம் இருக்கும் ஆனால் சந்தானம் இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைக்கட்டி நின்றன. சொல்லப்போனால் பாகுபலி இயக்குனர் ராஜமவுலியே நான் ஈ படத்துக்காக சந்தானத்தின் கால்ஷீட் கேட்டு காத்திருந்த சம்பவங்களும் அரங்கேறின. அந்த அளவுக்கு பிசியாக இருந்தார் சந்தானம்.
இப்படி காமெடியனாக டாப் கியரில் சென்றுகொண்டிருந்த சந்தானத்திற்கு திடீரென ஹீரோவாக நடிக்க ஆசை வந்தது. அதனால் அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு திண்ண ஆசையா, இனிமே இப்படித்தான் என நகைச்சுவை படங்களில் ஹீரோவாக நடித்த அவர், ஒரு கட்டத்தில் காமெடியனாக நடிக்க மாட்டேன் என அறிவித்து முழு நேர ஹீரோவாக மாறினார். அவரின் இந்த முடிவு அவருக்கு முழுமையாக கைகொடுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.
இதையும் படியுங்கள்... நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட்
அவர் காமெடியனாக நடித்தால் அந்தப் படம் கன்பார்ம் ஹிட் என இருந்தது. ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஒருசில மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. சந்தானம் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திய பின்னர், தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டது. அது அண்மையில் ரிலீஸ் ஆன மதகஜராஜா படம் மூலம் அப்பட்டமாக தெரிந்தது. சந்தானம் என்கிற காமெடி நடிகரை கோலிவுட் எவ்வளவு மிஸ் பண்ணியது என்பதை இப்படம் உணர்த்தியது.
தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், கெளதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தானத்துக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் சந்தானம் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.
அதன்படி நடிகர் சந்தானம் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.80 முதல் 90 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டே திருமணம் ஆனது. உஷா என்பவரை திருமணம் செய்துகொண்ட சந்தானத்துக்கு ஹாசினி என்கிற மகளும், நிபுன் என்கிற மகனும் உள்ளனர். நடிப்பை தாண்டி ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட சந்தானம். சத்குருவின் தீவிர பக்தனாக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னையில் சொகுசு பங்களா உள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு ஆடம்பர கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார் சந்தானம்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் ராஜாவாக மாறிய மதகஜராஜா! 8 நாட்களில் இத்தனை கோடி கலெக்ஷனா?