காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!

Published : May 05, 2025, 01:15 PM IST

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நல குறைவு  காரணமாக இன்று காலை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

PREV
15
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!
Goundamani Wife Shanthi Shocking Death

தமிழ் திரையுலக ரசிகர்களால் காமெடி கிங் என்று கொண்டாடப்படுபவர் கவுண்டமணி. 80-பது மற்றும் 90-களில் இவருடைய காமெடியை பார்த்து ரசிப்பதற்காகவே பல ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவது உண்டு. அந்த அளவுக்கு செந்தில் - கவுண்டமணி காம்பினேஷனில் உருவாகும் காமெடி காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
 

25
ஈடு இணையில்லா காமெடி ஜாம்பவான் கவுண்டமணி:

தற்போது வரை 90-ஸ் கிட்ஸ் பலர் கவுண்டமணி மற்றும் செந்திலின் காமெடி காட்சிகளை பார்த்து ரசித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய கவுண்டமணி, 1970 ஆம் ஆண்டு 'ராமன் எந்தன் ராமனடி' என்கிறார் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  பட வாய்ப்புக்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் நின்று இவர் வாய்ப்பு கேட்ட காலங்களும் உண்டு. 
 

35
கவுண்டமணிக்காக சண்டை போட்ட பாக்யராஜ்:

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'மூன்று முடிச்சு' படத்தில் இவரை நடிக்க வைக்க பாரதி ராஜா மறுத்த நிலையில், பாக்கியராஜ் தான் தன்னுடைய ஊர்க்காரர் என்கிற பாசத்தில் இவரை அந்த படத்தில் சண்டை போட்டு... நடிக்க வைக்க வேண்டும் என வற்புறுத்தினார். மேலும் இவரது காட்சிகள் இந்த படத்தில் அதிகம் பேசப்பட ஒரு சில வருடங்களிலேயே அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கி பிஸியான நடிகராக மாறினார்.

45
திருமணத்தின் போது மனைவியுடன் கவுண்டமணி:

பல காதல் ஜோடிகளுக்கு சப்போர்ட் செய்யும் வேடங்களில் நடித்துள்ள கவுண்டமணி, நிஜத்தில் தன்னுடைய மனைவி சாந்தியை காதலித்து கரம் பிடித்தவர். இவர்களுடைய திருமணம் 1963 ஆம் ஆண்டு நடந்தது. கவுண்டமணிக்கு செல்வி - சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். தன்னுடைய குடும்பத்தின் மீது மீடியாக்கள் வெளிச்சம் படுவதை விரும்பாத கவுண்டமணி, மகள்களை நன்கு படிக்க வைத்து பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததோடு, குடும்பத்தினரை எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ள அனுமதித்தது இல்லை.

55
கவுண்டமணி மனைவி சாந்தி காலமானார்:

இந்நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி, சில மாதங்களாக உடல்நலம் இன்றி இருந்த நிலையில்... இன்று காலை 10:30 மணி அளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவருடைய உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கவுண்டமணியின் மனைவி சாந்திக்கு தற்போது 67 வயது ஆவது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவு செய்தியை அறிந்து பலர், தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்த பலர் நேரில் சென்று இவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories