விஜயகாந்த் நடித்த ஹானஸ்ட் ராஜ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரவி கே சந்திரன். அதன்பின் ராஜீவ் மேனன், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானார். இவரது மகன் சந்தன கிருஷ்ணனின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
210
ராஜீவ் மேனன் இயக்கிய மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரவி கே சந்திரன் தான். ராஜீவ் மேனன் சந்தன கிருஷ்ணன் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் தான் இது.
310
அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் படத்திற்கும் ரவி கே சந்திரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இயக்குனர் ஷங்கரும் திருமணத்தில் கலந்துகொண்டார்.
410
இயக்குனர் மணிரத்னம் தனது மனைவி சுகாசினி உடன் வந்து ரவி கே சந்திரன் மகன் திருமணத்தில் கலந்துகொண்டனர். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது ரவி கே சந்திரன் தான்.
510
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு மற்றும் இந்தியில் அமீர்கானை வைத்து அவர் இயக்கிய கஜினி ஆகிய படங்களுக்கு ரவி கே சந்திரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
610
நடிகர் ஜீவாவும் ரவி கே சந்திரன் மகன் திருமணத்தில் தன் மனைவியுடன் வந்து கலந்துகொண்டார். தமிழில் ரவி கே சந்திரன் இயக்கிய ஒரே திரைப்படமான யான் படத்தில் ஜீவா தான் நாயகனாக நடித்திருந்தார்.
நடிகர் கார்த்தி இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினர். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றினார்.
810
மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் ரவி கே சந்திரனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அவர் தன் மகளும் நடிகையுமான கல்யாணி பிரியதர்ஷன் உடன் வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்.
910
ரவி கே சந்திரனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக உயர்ந்திருக்கும் ரவி வர்மனும் சந்தன கிருஷ்ணனின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
1010
தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் நடிகர் சிவகுமார் ஆகியோரும் ரவி கே சந்திரன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.