கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer.. 10 நாளில் படைத்த சிறப்பான சாதனை - இந்திய அளவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

First Published | Jul 30, 2023, 7:37 PM IST

பிரபல அமெரிக்க எழுத்தாளர் Kai Bird என்பவர் எழுதிய American Prometheus என்ற நாவலை தழுவி, பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள திரைப்படம் தான் Oppenheimer. அணுகுண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும் Robert Oppenheimerரின் வாழ்க்கை குறித்த இந்த படத்தில். பிரபல நடிகர் சில்லியன் மர்பி Oppenheimer கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். 

உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் நினைத்ததை போலவே பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். இந்திய ரசிகர்களுக்காக இந்த திரைப்படம் கடந்த ஜூலை 21ம் தேதி வெளியானது, இந்தியா முழுக்க சுமார் 2000 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Fake ID மூலம் என்னுடன் சேட்டிங். என்னை டேட்டிங் செய்ய விரும்பும் பாலிவுட் நடிகர்கள் - புயலை கிளப்பும் கங்கனா!

இந்நிலையில் இந்த படத்தின் இந்திய வெளியீட்டு நிறுவனம் தற்போது அறிவித்துள்ள தகவலின்படி, இந்த படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி உள்ள நிலையில், தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

Tap to resize

முன்னதாக இந்த திரைப்படத்தில் பகவத் கீதையில் வரும் சில வாக்கியங்களை கூறி, அதன் பிறகு ஒரு உடலுறவு கட்சி ஒன்று வருவது போல படமாக்கப்பட்டுள்ளது என்று கூறி மாபெரும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கும் இந்த சம்பவம் குறித்து ஒரு கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் நோலனுக்கு இந்தியாவிலும் சரி, குறிப்பாக தமிழகத்திலும் சரி, பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மனதில் நீங்காத இடம்.. ஆண்டுகள் கடந்து அசால்ட்டாக ஓடிவரும் டாப் தமிழ் சீரியல்கள் - ஒரு லுக்!
 

Latest Videos

click me!