Lokesh Kanagaraj, vikram
பொன்னியின் செல்வன் படம் மூலம் மாஸான கம்பேக் கொடுத்த நடிகர் விக்ரமுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கி உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கலான் படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் விக்ரம். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
shankar Birthday Party
இப்படி அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் நடிகர் விக்ரம் புது லுக்கில் வந்து கலந்துகொண்டார். மொட்டை தலையுடன் பிரெஞ்ச் பியர்டு தாடியுடன் செம்ம மாஸாக இருக்கும் விக்ரமின் இந்த லுக்கை பார்த்த ரசிகர்கள், அவர் லோகேஷ் கனகராஜ் அருகில் நிற்பதால், ஒருவேளை லியோ பட கேமியோ ரோலுக்காக தான் இப்படி புது லுக்கிற்கு மாறி இருக்கிறாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Lokesh kanagaraj, vikram
ஆனால் உண்மையில் அது சாத்தியமில்லை என்றாலும், அந்த லுக் லோகேஷ் கனகராஜ் படத்துக்காக தான் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நடிகர் விக்ரம் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தை லோகேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் தான் இயக்க உள்ளாராம். இந்த படத்திற்காக தான் விக்ரம் தற்போது புது லுக்கிற்கு மாறி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஷங்கர் கொடுத்த பிரம்மாண்ட பர்த்டே பார்ட்டி... படையெடுத்து வந்த கோலிவுட் பிரபலங்கள் - வைரலாகும் Party கிளிக்ஸ்