சித்ராவின் திருவான்மியூர் சொகுசு வீடு - ஆடி கார் எப்படி வந்தது? பகீர் கிளப்பும் தோழி..!

First Published | Dec 25, 2020, 1:53 PM IST

சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து இதுவரை உண்மை தகவல் வெளியாகாத நிலையில், சித்ரா திருவான்மியூரில் கட்டி வந்த சொகுசு பங்களா மற்றும் ஆடி கார் குறித்து, சித்ராவின் தோழி கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
Tap to resize

சித்ராவின் கணவர் ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது 250 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அனைவரிடமும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
அதே போல், சித்ரா வரதச்சனை கொடுமை காரணமாக இறக்க வில்லை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளனர்.
மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டும் படியான வார்த்தைகளை கூறி, அவர் சித்ராவை திட்டியதும் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, ஹேமந்தை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, சித்ராவின் தோழி கங்கா பாணி என்பவர்... சித்ரா தற்போது திருவான்மியூரில் கட்டி வந்த சொகுசு பங்களா மற்றும் அவர் சமீபத்தில் வாங்கிய ஆடி கார் போன்றவை சித்ரா மீது கண் வைத்திருந்த விஐபி மகன் ஒருவரின் செல்வாக்கால் தான் சித்ரா வாங்கியதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் சித்ரா மூன்று பேரை காதலித்துள்ளதாகவும், அதில் ஒரு சில காதல் திருமணம் வரை சென்று நின்றதையும், அவரது ஆடி கார் மற்றும் சொகுசு பங்களா சில விஐபி மகன்களுடன் சித்ராவிற்கு ஏற்பட்ட பழக்கத்தால், அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியது என்றும் இதற்கான இஎம்ஐ போன்றவை மட்டுமே செலுத்தி வந்ததாக தெரிவித்தார்.
ஆனால் இந்த தகவலை சித்ராவின் தாயார் விஜயா அடியோடு மறுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!