இவருக்கு எதிராக பல போட்டியாளர்கள் செயல்பட்டாலும், அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல், தன் வேலையையும், தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துகளையும் தெரிவிப்பது தான் இவரது பிளஸ் என கூறலாம்.
எனவே இவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் என, ரசிகர்கள் மட்டும் அல்ல சில பிரபலங்களும் தங்களது கருத்துக்களை ஆரிக்கு ஆதரவாக தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பால் கேட்ச் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய ரியோ, சோம், மற்றும் ஆரி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இவர்களுக்கு ஸ்னோவ் பொம்மை போல் உள்ள டப்பாவை... தர்மகோல் துகள்களை வைத்து நிரப்ப வேண்டும் என கூறப்பட்டது.
மூவரும் விடாப்பிடியாக, இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், இறுதியில் ஆரி கேப்டன் பதவியை கை பற்றியதாக தற்போதைய தலைவர் பாலா அறிவிக்கிறார்.
இதைத்தொடர்ந்து ஆரிக்கு சக போட்டியாளர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். மேலும் ஆரி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆரி ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.