இந்த வாரம் மிக குறைவான வாக்குகளை பெற்ற 3 பிக்பாஸ் போட்டியாளர்கள்..! யார் யார் தெரியுமா?

Published : Oct 21, 2021, 02:49 PM ISTUpdated : Oct 21, 2021, 02:50 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி (Biggboss tamil 5)  3 ஆவது வாரத்தை எட்ட உள்ள நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது குறித்த தகவல்கள் வெளியாக துவங்கி விட்டன. அந்த வகையில் மிக குறைவான வாக்குகளை பெற்று 3 போட்டியாளர்கள் டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்படுகிறது.  

PREV
16
இந்த வாரம் மிக குறைவான வாக்குகளை பெற்ற 3 பிக்பாஸ் போட்டியாளர்கள்..! யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் தங்களை ரொம்ப நல்லவர்கள் என்று வெளிகாட்டிக்கொண்ட நிலையில், மெல்ல மெல்ல இவர்களுடைய சாயம் வெளுக்க துவங்கி விட்டது.

 

26

இவர்களின் ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப ஓவராக பேசி அபிஷேக் பிக்பாஸ் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளார். அதே போல் புரோமோவில் இடம்பிடிக்க இவர் ஒவ்வொரு நாளும் படும் பாடு அனைவரும் அறிந்ததே...

 

36

இவரை தொடர்ந்து முதல் வாரத்தில் பாவமான போட்டியாளராக பார்க்கப்பட்ட பாவணி பின்னால் சென்று, மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசுவதாகவும் ஒரு கண்ணோட்டம் நிலவி வருகிறது.

 

46

மதுமிதா, ஜக்கி பெரி, அபிநய், நிரூப், இசை வாணி, போன்ற சிலர் இன்னும் முன்னாள் வந்து விளையாடாதது போலவே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

 

56

இது ஒருபுறம் இருக்க... இந்த வாரம் மட்டும் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு உள்ளிட்ட 9 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

 

66

இவர்களின் சின்ன பொண்ணு, அபிஷேக், மற்றும் அபிநய் ஆகிய 3 பேர் மட்டும் மிக குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறுபவர்கள் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூவரில் யார் வெளியேறுவார் என்பதை இந்த வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories