பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் நண்பர்களுடன் போதை பொருள் பார்ட்டி கொண்டாடியதாக, அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த NCB அதிகாரிகளிடம் ஆர்யன் கான் கடந்த சில வருடங்களாகவே போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். எனினும் கப்பலில் இவரிடம் இருந்து எந்த போதை பொருளும் கைப்பற்றப்பட்ட வில்லை.
மாறாக இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட சிலரிடம் இருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்ற பட்டது. தீவிர விசாரணைக்கு பின்னர், அக்டோபர் 8 ஆம் தேதி மும்பையில் உள்ள ஆதார் சாலை சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு பல முறை ஜாமீன் கேட்டு, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட போதும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து ஷாருகான் குடும்பத்தினர் ஆர்யன் கான் ஜாமீனுக்காக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகன் ஆர்யன் கானை கொண்டு வர ஷாருகான் குடும்பத்தினர் துடித்து கொண்டுள்ளனர். மற்றொரு புறம் ஷாருகான் தன்னுடைய பட வேலைகள் உள்ளிட்ட அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, சிறையில் இருக்கும் மகனை வெளியே கொண்டுவர முடியவில்லை என்கிற மன அழுத்தத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.
இன்று காலை தன்னுடைய மகனை பார்ப்பதற்காக ஷாருகான் ஆதார் சாலை சிறைக்கு சென்று ஆர்யன் கானை சந்தித்து பேசினார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
தற்போது, ஷாருகானின் வீட்டிற்கு சென்று போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய சென்றுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.