இதையடுத்து வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி வந்தது. ஆனால் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் நடிகர் தனுஷ். 2003 ஆம் ஆண்டின் புகைபிடித்தல் தடைச் சட்டத்தின்படி, புகைபிடிக்கும் பொருட்களுக்கான விளம்பரங்களில் தான் இவ்வாறு எழுதப்பட வேண்டும். இது புகையிலை விளம்பரம் அல்ல, திரைப்படம். இதனை படத்தில் காட்டக்கூடாது என தனுஷ் தரப்பில் வாதிடப்பட்டது.