ரூபிக் க்யூப் மூலம் அசத்தல்... ‘வலிமை’ அஜித்தை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்த சிறுவர்கள்...!

Published : Jul 28, 2021, 07:47 PM IST

தல அஜித்தின் வலிமை பட போஸ்டரை 955 ரூபிக் கியூப்களால் தத்ரூபமாக வடிவமைத்த இரண்டு சிறுவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

PREV
15
ரூபிக் க்யூப் மூலம்  அசத்தல்... ‘வலிமை’ அஜித்தை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்த சிறுவர்கள்...!
Thala Ajith

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. அத்தோடு சரி அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. 

25
Thala Ajith

பொறுத்து, பொறுத்து பார்த்த ரசிகர்கள் திருச்செந்தூர் முருகனில் இருந்து பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அட்ராசிட்டியில் இறங்கினர். சோசியல் மீடியாக்களில் அஜித் ரசிகர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்ததை அடுத்து, இனியும் நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது என படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட முடிவெடுத்தது.

35
Thala Ajith

ஜூலை 11ம் தேதி மாலை 6 மணிக்கு விதவிதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், மிரட்டலான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டு படக்குழு தல ரசிகர்களை திக்குமுக்காட வைத்து. அதுமட்டுமின்றி வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட இந்திய மோஷன் போஸ்டர் என்ற பெருமையையும் பெற்றது. 

45
Thala Ajith

தற்போதைய நிலவரப்படி வலிமை பட விற்பனை நிறைவடைந்து விட்டதாகவும்,  தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அஜித்தின் வலிமை போஸ்டரை வைத்து இரு சிறுவர்கள் செய்துள்ள சாதனை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

55
Thala Ajith

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிறுவர்கள் தர்ஷன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் அஜித்தின் வலிமை பட போஸ்டரை 955 ரூபிக் கியூப்களைப் பயன்படுத்தி தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories