ஒத்த படத்தில் நடிச்சதுக்கே இவ்வளவு பில்டப்பா?.. டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க கோடி ரூபாய் பேரம் பேசிய இளம் நடிகை

First Published | Jul 28, 2021, 7:03 PM IST

17 வயதான இளம் நடிகை இப்படி கோடிகளில் சம்பளம் கேட்பதை பார்த்து தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம். 

வசீகரமான அழகும், அசத்தலான நடிப்பும் இருந்தாலும் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோயின்களின் பட்டியல் மிக நீளம். அப்படியிருக்க வெகு சில நடிகைகள் மட்டுமே முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர்.
 

கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘உப்பெனா’. இந்த படத்தை அறிமுகங்களை கலவை என குறிப்பிடலாம். காரணம் இயக்குநர் பிச்சி பாபு சனா, ஹீரோ வைஷ்ணவ் தேஜ், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி என அனைவருக்குமே இது முதல் படம்.
 

Tap to resize

uppena

இதில் கீர்த்தி ஷெட்டியின் தந்தையாகவும், சாதிவெறி பிடித்த பெரிய மனிதனாகவும் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். ரொமான்ஸ் காட்சிகளில் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது.

முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் கீர்த்தி ஷெட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறிய கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதனால் அம்மணியும் இஷ்டத்துக்கு கோடிகளில் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. 

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படம், நானி நடிக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் சுதீர் பாபு நடிக்கும் ஒரு படம் என மூன்று படங்களில் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். இது இல்லாமல் தமிழிலும் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, ரசிகர்கள் மனதிலும் நச்சென பதிந்துவிட்டதால் கீர்த்தி ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க ரூ.2 கோடி வரை சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. 17 வயதான இளம் நடிகை இப்படி கோடிகளில் சம்பளம் கேட்பதை பார்த்து தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம். 

Krithi Shetty

இந்த சங்கதி எல்லாம் தெரியாமல் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகையிடம் தேதி கேட்டுள்ளனர். அவரோ ஒரு விரலை காட்டி, ஒரு கோடி கொடுத்தால் ஓ.கே. இல்லையென்றால் வர முடியாது என கறார் காட்டியுள்ளார். இந்த செய்தி வெளியே கசிய, ஒத்த படம் ஹிட்டானதுக்கே இத்தனை பில்டப்பா என நடிகையைப் பற்றி கிசுக்கள் எழ ஆரம்பித்துள்ளது. 

Latest Videos

click me!