இதில் ஹீரோயின் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியனுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டோ, அதே அளவிற்கு வில்லி வெண்பாகவாக நடித்து வரும் பரீனாவிற்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பரீனா, சீரியல் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு கூட சளைக்காமல் பதில் கொடுத்து வருபவர்.