தவறான எண்ணம்.. கையில் சிக்கிய வீடியோ! சுந்தரபாண்டியனுக்கு விஜி கொடுத்த மரண அடி - இன்றைய எபிசோட்!

Published : Mar 03, 2026, 05:08 PM IST

Chellame Chellame Viji Fires Sundarapandian : செல்லமே செல்லமே சீரியலில் விஜியை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுக்கிறார் அதனை கண்டுபிடிக்கிறார் விஜி என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
Sundarapandian Video Issue Chellame Chellame

செல்லமே செல்லமே சீரியலில் நேற்று எபிசோடில் விஜயின் கணவர் தான் விக்ரம் என்று தெரியாமல் தன் மகளை ஏமாற்றிய சென்ற விக்ரம் இவர்தான் என்று தெரியாமல் அன்பாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆபாசமாக வீடியோ எடுக்கும் சுந்தர பாண்டியன்: விஜி கடையில் துணிகளை மேலே எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பின்புறமாக வந்த சுந்தரபாண்டியன் விஜய்க்கு தெரியாமல் போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

26
Viji Fires Sundarapandian

சுந்தர பாண்டியன் செயலை பார்த்து விடும் விதியின் தோழி: சுந்தரபாண்டியன் ஆபாசமாக வீடியோ எடுப்பதை விதியின் பார்த்துக்கொண்டே இருக்கும் பொழுது திடீரென்று சுந்தரபாண்டியன் ஓடிவிடுகிறார் அதன் பிறகு விஜி இங்க வா என்று அவர் தோழி கூப்பிட என்ன என்று கேட்க சுந்தரபாண்டியன் ஆபாசமாக வீடியோ எடுக்கிறார் என்று சொல்கிறார் அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த விஜி இப்படி எல்லாம் இருக்காது என்று சொல்ல உண்மையாவே நீ வேணா அவ போன வாங்கி பாரு என்று சொல்ல அவரது தோழியும் செல்கின்றனர்.

36
சுந்தர பாண்டியனிடம் கேட்கும் விஜி:

விஜியும் அவரது தோழியும் சுந்தர பாண்டியனின் முன் நிற்கின்றனர். சுந்தரபாண்டியன் என்ன ரெண்டு பேரும் ஜோடி போட்டுட்டு வந்து நிக்கிறீங்க. இப்படி ஆடி அசைஞ்சு நேரத்தை கடத்தாம சீக்கிரம் போய் சாப்பிட்டு வேலைய பாருங்க என்று சுந்தரபாண்டியன் சொல்கிறார். அதற்கு விஜி சுந்தரபாண்டியனை முறைத்தபடியே நின்று கொண்டிருக்கிறார். என்ன அப்படி பார்த்துட்டு இருக்க என்ன விஷயம் என்று சுந்தரபாண்டியன் கேட்க உங்க போன குடுங்க என்று கடும் கோபமாக கேட்கிறார் விஜி. ஏன் போனா என்று சொல்லிவிட்டு மனதுக்குள் என்ன திடுதுப்புன்னு வந்து போன கேட்க நம்ம வீடியோ எடுத்தது ஒருவேளை தெரிஞ்சிருச்சு என்று நினைக்கிறார் சுந்தர பாண்டியன். 

46
Chellame Chellame Serial Today Episode Tamil

அப்பொழுது விஜி உன் போனை குடுன்னு சொன்னேன் என்று அதிகாரமாக கேட்கிறார். எதுக்கு எதுக்கு என்று மிகுந்த பயத்துடன் சுந்தர பாண்டியன் சொல்ல மரியாதையா போனை குடுன்னு சொன்னேன் என்று சொல்கிறார் விஜி. என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு யாருன்னு தெரிஞ்சுகிட்டு தான் வந்து பேசுறியா என்று பயத்தின் தடுமாற்றத்துடன் பேசுகிறார் சுந்தரபாண்டியன். எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் வந்து பேசுறேன் இப்ப போன கொடுக்க போறியா இல்லையா என்று விஜி சொல்ல அதெல்லாம் தர முடியாது என்று சொல்கிறார் சுந்தர பாண்டியன். தரப் போறியா இல்லையா என்று விஜி சொல்ல அதெல்லாம் தர முடியாது நீ தேவை இல்லாம ஏதோ பண்ணிக்கிட்டு இருக்க என் போனை எதுக்கு கேக்குற என்று சுந்தரபாண்டியன் நடுக்கத்துடன் பேசுகிறார் அப்பொழுது விஜியின் தோழி போனதா கேக்குறாங்களா சார் குடுங்க என்று சொல்கிறார்.

56
உண்மையை கண்டுபிடிக்கவும் விஜி:

எதுக்கு போன கேட்டா தர மாட்டேங்குற உன் போன்ல என்ன தப்பா வீடியோ எடுத்து வச்சிருக்க என்று உண்மையை உடைக்கிறார் விஜி. உண்மையை சொன்னதும் அதிர்ச்சியில் வாயடைச்சு போகிறார் சுந்தரபாண்டியன். சுந்தர பாண்டியன் பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார் என்ன சொல்ற அப்படி எல்லாம் செய்யல என்று உலர்ந்தபடியே பேசுகிறார் சுந்தரபாண்டியன். எதுக்கு என்ன பத்தி இல்லாத பொல்லாத பத்தி சொல்ற என்று சொல்கிறார் சுந்தரபாண்டியன். நடிக்காத எனக்கு எல்லாம் தெரியும். போன கொடுக்க போறியா இல்லையா என்று கேட்கிறார் அதற்கு சுந்தரபாண்டியன் இங்க பாரு விஜி. என்ன தப்பா புரிஞ்சுக்கிற என்று சொல்ல நான் புரிஞ்சுக்கல நீ தப்பானவன் என்று தெரிஞ்சு தான் வந்து பேசிட்டு இருக்கேன். சொல்லிவிட்டு போனை புடுங்கி பார்க்கிறார் விஜி.

66
ஆபாச வீடியோ:

அந்த வீடியோவை ஆன் செய்து விஜி பார்க்கிறார் அதில் விஜியைஆபாசமாக சுந்தர பாண்டியன் படம் பிடித்து வைத்திருக்கிறார். அதை பார்த்ததும் விஜி மிகவும் கோபப்பட்டு சுந்தர பாண்டியன் கன்னத்தில் பளார் என்று கொடுக்கிறார். இப்படி ஆபாசமா வீடியோ எடுக்குறியா உனக்கு அசிங்கமா இல்லை என்று அவரை கேவலமாக பேசிவிட்டு உன்னை எல்லாம் நான் சும்மாவே விடமாட்டேன். இப்பவே போயி ஓனர்ட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு என்று சொல்லிவிட்டு செல்கிறார் விஜி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories