தடைவிதித்த சென்சார் போர்டுக்கே விபூதி அடித்து; இளையராஜா ஹிட்டாக்கிய பாடல் எது தெரியுமா?

First Published | Dec 6, 2024, 2:06 PM IST

Ilaiyaraaja Song Secret : சென்சார் போர்டு தடைவிதித்த பாடலை இளையராஜா பட்டி டிங்கரிங் பார்த்து வேறு படத்தில் பயன்படுத்தி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கி இருக்கிறார் இசைஞானி.

Isaignani Ilaiyaraaja

இசைஞானி இளையராஜா இசையில் உருவான பாடல்கள் மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. தன்னுடைய இசையால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ராஜாங்கம் நடத்தி வரும் அவர், தற்போது வரை டிரெண்டில் இருக்கிறார். இன்று ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பலர் டாப் கியரில் சென்றாலும் விடுதலை 2 படத்தின் பாடல்கள் மூலம் தானும் அந்த ரேஸில் இணைந்திருக்கிறார் இளையராஜா. தற்போது அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆனாலும் அவரது இசையால் இன்றும் இளமையாகவே இருக்கிறார் இளையராஜா.

Ilaiyaraaja Song Secret

இசைஞானி இசையில் உருவான பாடல் ஒன்றிற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தடைவிதித்து இருக்கின்றனர். ஆனால் அந்த ட்யூனை வேறு ஒரு படத்தில் பயன்படுத்தி பட்டிதொட்டியெங்கும் ஹிட் கொடுத்திருக்கிறார் இளையராஜா. அது வேறெதுவுமில்லை... கமலஹாசன் நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான ‘நிலா காயுது’ பாடல் தான். இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி ஆகியோர் பாடி இருந்தனர்.

இதையும் படியுங்கள்... ரஜினிக்காக இளையராஜா விசிலடித்தே உருவாக்கிய எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?

Tap to resize

Nallathu Nadanthe Theerum Movie Song

இன்றுவரை ஊர் திருவிழாக்களில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி இருந்தால் அதில் இந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும், அந்த அளவுக்கு மக்களால் கொண்டாடப்படும் பாடலாக இது உள்ளது. இந்தப் பாடலை இளையராஜா சகலகலா வல்லவன் படத்துக்காக கம்போஸ் செய்யவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் நிஜம். இப்பாடலை 1981-ம் ஆண்டு காரைக்குடி நாராயணன் இயக்கிய ‘நல்லது நடந்தே தீரும்’ என்கிற படத்துக்காக கம்போஸ் பண்ணினாராம் இளையராஜா.

NIla Kayuthu Song Secret

அந்த பாடல் காட்சியை படமாக்கிவிட்டு சென்சாருக்கு படத்தை அனுப்பும்போது, இந்த பாடலை நீக்கினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி கொடுப்போம் என சென்சார் போர்டு அதிகாரிகள் கறாராக சொல்லிவிட்டார்களாம். அதனால் அப்படத்தில் இருந்து அந்த பாடல் காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

Censor Board banned Ilaiyaraajaa song

ஆனால் இளையராஜாவுக்கு அந்த ட்யூன் மிகவும் பிடித்துப்போனதால், அதை வேறு படத்தில் பயன்படுத்தும் முனைப்போடு இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் சகலகலா வல்லவன் பட கம்போஸிங் நடந்திருக்கிறது. அதில் இந்த ட்யூனை ராஜா போட்டுக்காட்ட அது அனைவருக்கு பிடித்திருக்கிறது. உடனே அந்த ட்யூனுக்கான அனுமதியை நல்லது நடந்தே தீரும் படக்குழுவிடம் வாங்கி சகலகலா வல்லவன் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் இளையராஜா டபுள் சந்தோஷம் அடைந்தாராம்.

இதையும் படியுங்கள்... போட்டோ எடுக்க வந்த ஹீரோயின்; சண்டை போட்டுக்கொண்ட ‘ரஜினி - இளையராஜா’!

Latest Videos

click me!