கடவுளே... இது என்ன கொடுமை! புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு கதறி அழுத பிரபலங்கள்!

Published : Oct 30, 2021, 05:05 PM IST

புனீத் ராஜ்குமார் (Puneeth Rajukumar Death) நேற்று மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த நிலையில்... திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலர் புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.   பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
17
கடவுளே... இது என்ன கொடுமை! புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு கதறி அழுத பிரபலங்கள்!

கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் அனைத்து திரையுலக நடிகர்களுடனும் மிகவும் நட்புடன் இருந்தவர். இவரது இழப்பு தற்போது வரை ரசிகர்கள் மற்றும் பிரபலன்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

 

27

தற்போது இவரது உடல் பெங்களூரு மைய பகுதியில் உள்ள கண்டிர்வா மைதனாத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு விடிய விடிய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

37

மைதானத்தின் வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் புனீத் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

47

நடிகர் பிரபு தேவா, நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோர் கண்ணீர் விட்டபடி அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, நந்தமூரி பாலகிருஷ்ணா... புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு... இது என்ன கொடுமை என புலம்பியபடி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே நெகிழ வைத்தது.

 

 

57

மேலும் பிரபல கன்னட நடிகர் சுதீப், நடிகை குத்து ரம்யா, அர்ஜுன் போன்ற பலர் நேரடியாக வந்து ரசிகர்களோடு நின்றபடி அஞ்சலி செலுத்தினர்.

 

67

அதே போல் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

77

புனீத் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த நிலையில்... திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலர் புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories