சினிமா சான்ஸ் வேணும்னா இத்தனை பேருடன் படுக்கையை பகிரணும் - பகீர் கிளப்பிய நடிகை!
தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு வேண்டுமானால் பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கசப்பான அனுபவத்தை நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு வேண்டுமானால் பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கசப்பான அனுபவத்தை நடிகை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
Actress Face Casting Couch in South Film Industry : பாலிவுட் மட்டுமல்ல, பெரும்பாலான சினிமா துறைகளில் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசியுள்ளனர். காஸ்டிங் கவுச் என்பது சில வருடங்களாக சினிமா துறையில் அதிகம் பேசப்பட்ட வார்த்தை. 2018ல் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார். பிறகு மீ டூ என்ற பெரிய இயக்கம் தொடங்கியது. அதிலிருந்து பல நடிகைகள் முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கூறினர்.
அதன்பின் மீ டூ மற்றும் காஸ்டிங் கவுச் பெரிய வடிவம் பெற்றது. நடிப்புத் துறையில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் உள்ள பெண்களும் இதைப் பற்றி பேசத் தொடங்கினர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல் குறித்து இந்தி சின்னத்திரை நடிகை ரத்தன் ராஜ்புத் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபலமான சின்னத்திரை நிகழ்ச்சியான 'அக்லே ஜனம் மோஹே பிட்டியா ஹி கிஜோ' மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலமான ரத்தன் ராஜ்புத் தற்போது சினிமா உலகில் இருந்து விலகி இருக்கிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆட்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில், சின்னத்திரையில் நடக்கும் காஸ்டிங் கவுச் பழக்கத்தை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இப்போது அவர் தென்னிந்தியத் துறையிலும் காஸ்டிங் கவுச் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். ரத்தன் ராஜ்புத் தனது சமீபத்திய பேட்டியில், தென்னிந்திய திரைப்படத் துறையை மக்கள் மிகவும் சிறந்ததாக கருதுகிறார்கள், ஆனால் அங்கேயும் காஸ்டிங் கவுச் மிகவும் பரவலாக உள்ளது என்று கூறியுள்ளார். ரத்தன், லாலி கதாபாத்திரத்தில் நடித்தபோது, தென்னிந்திய திரைப்படத் துறையிலிருந்து நடிக்க பல அழைப்புகள் வந்ததாம். இருப்பினும், அவர்கள் அனைவரும் என்னிடம் சமரசம் செய்து கொள்ளும்படி கேட்டார்கள் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், 'எனக்கு தெற்கிலிருந்து, சில சிறந்த இயக்குனர்களிடமிருந்து பல அழைப்புகள் வந்தன, ஆனால் அதனுடன் அவர்கள் ரத்தன் ஜி, நீங்கள் கொஞ்சம் எடை அதிகரிக்க வேண்டும், நீங்கள் மிகவும் மெலிதாக இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்'. இந்த கோரிக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு நான் எடை அதிகரிக்க சம்மதித்தேன். இதன்பிறகு பேச்சு வேறு திசையில் திரும்பியது. ஒருவர் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி, விதிகள் எல்லாம் உங்களுக்கு தெரியும் அல்லவா என்று கேட்டார்.
இதையும் படியுங்கள்... Vaishnavi: சூட்டிங் ஸ்பாட்டில் விழுந்து வாரிய விஜய் டிவி சீரியல் நடிகையின் நிலை! வைரலாகும் போட்டோ!
அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன், என்ன விதி என்று கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் தெற்கில் நிலைக்க வேண்டுமென்றால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் இன்னும் ஒருவருடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றார். நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தேன். அப்போது அவர் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். DOP உடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றார். (DOP என்றால் ஒளிப்பதிவாளர்). பிறகு நான் அந்த வாய்ப்பை நிராகரித்து வந்தேன்.
நானும் அந்த வாய்ப்புக்கு ஓகே சொல்லியிருந்தால் சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என்றார். அதிலிருந்து எனக்கு தெற்கிலிருந்து வாய்ப்பு வரவில்லை. ஏனென்றால் அழைக்கும்போதெல்லாம் இதே வார்த்தையை பேசினார்கள். நான் ஒப்புக்கொள்ளாததால், வாய்ப்பு கொடுக்கவில்லை. முதலில் தெற்கிலிருந்து எந்த வாய்ப்பு வந்தாலும் அருவருப்பாக இருந்தது, அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கு சமரசம் செய்து கொள்ள என்னால் முடியாது. மக்கள் பாலிவுட்டில் என்ன பேசுகிறார்களோ, அதுவே தெற்கிலும் நடக்கிறது என்று ரத்தன் கூறினார். இதேவேளை டோலிவுட்டை பாராட்டிய நடிகை, டோலிவுட் இன்னும் நன்றாக இருக்க காரணம் அவர்கள் இன்னும் தங்கள் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், உடைகள் மற்றும் எல்லாவற்றையும் மதிக்கிறார்கள் என்றார்.
இதையும் படியுங்கள்... நடிகையை தாக்கிவிட்டு நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்! திரையுலகில் பரபரப்பு!