ரஜினிக்கு பதிலாக களமிறங்கும் அருண் விஜய்... ஒருவழியாக கன்பார்ம் ஆன பொங்கல் ரிலீஸ் படங்கள் - முழு லிஸ்ட் இதோ

First Published | Jan 2, 2024, 2:06 PM IST

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அப்போது ரிலீஸ் ஆக உள்ள தரமான தமிழ் படங்கள் குறித்த முழு பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

pongal release movies

பொங்கல் நீண்ட விடுமுறையை கொண்ட பண்டிகை என்பதால், அந்த சமயத்தில் புதுப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆவதுண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் இருபெரும் உச்ச நட்சத்திரங்களான விஜய் - அஜித்தின் படங்கள் நேருக்கு நேர் மோதின. ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு அவர்கள் படம் வராவிட்டாலும், தரமான நான்கு நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

அயலான்

பொங்கல் ரேஸில் முதல் ஆளாக நுழைந்த திரைப்படம் அயலான். சிவகார்த்திகேயன் நடித்த இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பணிகள் நிறைவடையாததால் பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும் 24ஏஎம் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படம் ஜனவரி 12-ந் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tap to resize

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படமும் ஜனவரி 12-ந் தேதி திரைக்கு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மெரி கிறிஸ்துமஸ்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள பான் இந்தியா திரைப்படம் தான் மெரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அந்தாதூன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். கடந்த மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் பொங்கலுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படமும் ஜனவரி 12ந் தேதி திரைகாண உள்ளது.

மிஷன் - சாப்டர் 1

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மிஷன் படம் தான் பொங்கல் ரேஸில் கடைசியாக இணைந்த படம். இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் முதலில் ரஜினியின் லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது. கடைசி நேரத்தில் அப்படம் தள்ளிப்போனதால் அதற்கு பதிலாக மிஷன் படத்தை களமிறக்கி உள்ளனர். மிஷன் திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். இப்படத்தில் எமி ஜாக்‌ஷன் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படமும் ஜனவரி 12-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆனதும் பெண் போட்டியாளருடன் அவுட்டிங்... ஐஷூவை சந்தித்தாரா நிக்சன்? வைரல் போட்டோஸ்

Latest Videos

click me!