திருமணமாகி 14 வருடத்துக்கு பின் காதல் கணவரை விவாகரத்து செய்தார் அயலான் பட நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published : Dec 31, 2023, 11:15 AM IST

அயலான் படத்தில் நடித்துள்ள நடிகை இஷா கோபிக்கர் தன் காதல் கணவனை திடீரென விவாகரத்து செய்து பிரிந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
14
திருமணமாகி 14 வருடத்துக்கு பின் காதல் கணவரை விவாகரத்து செய்தார் அயலான் பட நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

சந்திரலேகா என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இஷா கோபிக்கர். இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இஷா. இதையடுத்து பிரசாந்தின் காதல் கவிதை படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் இஷா கோபிக்கர். பின்னர் என் சுவாச காற்றே, விஜய்க்கு ஜோடியாக நெஞ்சினிலே மற்றும் விஜயகாந்தின் நரசிம்மா போன்ற படங்களில் நடித்தார் இஷா.

24

கோலிவுட்டில் தொடர்ந்து சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் பக்கம் சென்ற இஷா கோபிக்கர் அங்கேயே செட்டில் ஆனார். அங்கு சல்மான் கான், அக்‌ஷய் குமார், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார். இவர் தமிழ், இந்தி மட்டுமின்றி தெலுங்கு, மராத்தி, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34

நடிகை இஷா கோபிக்கருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் திம்மி நரங் என்கிற தொழிலதிபரை காதலித்து கரம்பிடித்தார். ஜிம்முக்கு சென்றபோது இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் இருக்கிறார். சுமார் 14 ஆண்டுகள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

44

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்தனர். தற்போது கணவரை பிரிந்து இஷா கோபிக்கர் மகளுடன் தனியாக வந்துவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை இஷா கோபிக்கர் விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அவர் நடிப்பில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

இதையும் படியுங்கள்...தளபதியின் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பம்... நெல்லை விசிட்டின் போது சைலண்டாக விஜய் செய்த பேருதவி

click me!

Recommended Stories