மலையாள நடிகையான மாளவிகா மோகனன் மலையாளம், இந்தி, படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்த படத்திலேயே தளபதி விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, தனுஷின் 43 ஆவது படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். தனுஷ் அமெரிக்கா செல்வதற்கு முன்பு இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்திய வந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தளபதி விஜய் பிறந்தநாளை அடுத்து சமூக வலைதளங்களில் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது தனுஷ்... தன்னை 'மால்மோ' என்று தான் செல்லமாக அழைப்பார் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தன்னை 'மாலு' என்றே அழைப்பார்கள் என்றும் மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
தனுஷ் மாளவிகா மோகனனுக்கு வைத்த செல்ல பெயர் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நெட்டிசன்களும் இந்த செல்ல பெயருக்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.