Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ

Published : Jun 22, 2026, 09:27 AM IST

Top 10 Highest Grossing Movies of Thalapathy Vijay : தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்களை பார்க்கலாம்.

PREV
111
Vijay Highest Grossing Movies

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என கொண்டாடப்படுபவர் விஜய். இவர் படங்கள் வந்தாலே தியேட்டரில் திருவிழா போல இருக்கும். அந்த அளவுக்கு மவுசு மிக்க நடிகராக இருந்தார் விஜய். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது அரசியல் பக்கம் சென்றுவிட்டார். இவர் நடித்த படங்கள் மொத்தம் 69. ஆனால் அதில் இவர் படைத்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் என வந்துவிட்டால், கோலிவுட்டில் விஜய்யை மிஞ்ச ஆளில்லை. அந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி வந்துள்ளார் விஜய். இந்த நிலையில், அவர் நடித்து அதிக வசூலை அள்ளிய டாப் 10 திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay : லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை; தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ

211
10. கத்தி

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்றாலே அப்படம் கன்ஃபார்ம் ஹிட் தான். அந்த வகையில் துப்பாக்கி என்கிற மாஸ் ஹிட் படத்துக்கு பின்னர் விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் கூட்டணி அமைத்த படம் தான் கத்தி. இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 130 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது.

Vijay : மாதம் 2 லட்சம் சம்பளம் வாங்கும் முதல்வர் விஜய்-யின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க...!

311
9. தெறி

நடிகர் விஜய்யின் பேவரைட் இயக்குநர்களில் அட்லீயும் ஒருவர். அட்லீ இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்தார் விஜய், அதில் முதலில் அவர் நடித்த படம் தான் தெறி. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மாஸாக நடித்திருந்தார் தளபதி. இப்படம் 2016ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கைப்போடு போட்டதோடு 172 கோடி வசூலையும் வாரிக்குவித்தது.

411
8. பீஸ்ட்

விஜய்யின் கெரியரில் ஓவர் ஹைப்போடு உருவான படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் என்பதால் இது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.215 கோடி வசூலித்தது.

511
7. மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். மாநகரம், கைதி என இரண்டு மாஸ் ஹிட் படத்துக்கு பின்னர் லோகி இயக்கிய படம் இது. இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தார் விஜய். இப்படம் கொரோனா காலகட்டத்தில் ரிலீஸ் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.230 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

611
6. சர்க்கார்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் படம் தான் சர்க்கார். நடிகர் விஜய்யின் அரசியல் கெரியருக்கு அச்சாரம் போட்ட படம் என்றே இதை சொல்லலாம். இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் ரூ.258 கோடி வசூலையும் வாரிசுருட்டியது.

711
5. மெர்சல்

நடிகர் விஜய் மூன்று வித ரோல்களில் மிரட்டிய படம் தான் மெர்சல். அட்லீ இயக்கிய இப்படத்தில் அவரின் நடிப்பு மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்டது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.267 கோடி வசூலித்தது.

811
4. வாரிசு

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி இருந்தார். ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் விஜய் நடித்த இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, ரூ.306 கோடி வசூலையும் வாரிக்குவித்தது.

911
3. பிகில்

விஜய் - அட்லீ கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன படம் பிகில். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. இப்படத்தில் நடிகர் விஜய் பிகில், ராயப்பன் என இரண்டு வெவ்வேறு ரோல்களில் நடித்து மாஸ் ஹிட்டான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.321 கோடி வசூலை வாரிக்குவித்தது.

1011
2. கோட்

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இதில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கி இருந்தார். கடந்த 2024-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் வசூலில் ரூ.440 கோடி அள்ளியது.

1111
1. லியோ

நடிகர் விஜய்யின் கெரியரில் அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்றால் அது லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு, ரூ.615 கோடி வசூலையும் வாரிக்குவித்தது. விஜய் நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள ஜனநாயகன் திரைப்படம் இந்த வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories