நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸான படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். டோலிவுட்டை சேர்ந்த தயாரிப்பாளர் தில் ராஜு தான் இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருந்தார். முதன்முறையாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
அந்த வகையில், நேற்று வாரிசு திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. நடிகர் விஜய்யின் கெரியரில் ரூ.300 கோடிக்கு மேல் கலெக்ஷன் அள்ளிய 2-வது திரைப்படம் வாரிசு. இதற்கு முன் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் இந்த மைல்கல்லை எட்டி இருந்தது.
சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், வாரிசு படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே அதுகுறித்து எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் வம்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், வாரிசு படம் ரூ.300 கோடி வசூல் அள்ளியதாக படக்குழு அறிவித்தை, “300 கோடி. உலக மகா உருட்டு” என தாக்கி பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... செம்ம எனர்ஜியுடன் இறங்கி ஆடிய விஜய்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரஞ்சிதமே வீடியோ சாங் வந்தாச்சு