Blast vs Karuppu Box Office Collection : கருப்பனின் வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்ததா பிளாஸ்ட்?

Published : Jun 01, 2026, 11:28 AM IST

Blast vs Karuppu Box Office : சூர்யா நடித்த கருப்பு திரைப்படமும் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Blast Beat Karuppu in Box Office

அர்ஜுன் சர்ஜா ஹீரோவாக நடித்த 'பிளாஸ்ட்' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுபாஷ் கே ராஜ் இயக்கிய இந்தத் திரைப்படம், மே 28 அன்று உலகம் முழுவதும் வெளியானது. எல்லா இடங்களில் இருந்தும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இது ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் படம். இதில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோரின் சிறப்பான நடிப்புதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

25
பிளாஸ்ட் வசூல்

ஒரு கராத்தே மாஸ்டர், அவருடைய குடும்பம், அவர்களின் வாழ்க்கையில் அழைக்கப்படாமல் வரும் சில நபர்கள், அதனால் ஏற்படும் சம்பவங்கள்தான் 'பிளாஸ்ட்' படத்தின் கதைக்களம். ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வசூலிலும் இந்தப் படம் சாதனை படைத்து வருகிறது. Sacnilk அறிக்கையின்படி, 'பிளாஸ்ட்' படம் உலகளவில் இதுவரை சுமார் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் இருந்து மட்டும் 16.03 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் இருந்து 5.15 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

35
பிளாஸ்ட் படக்குழு

அர்ஜுன் சிதம்பரம், திலீபன், பாலா ஹசன், ஜான் கொக்கன், ரமேஷ் நாராயணன், பவன், விவேக் பிரசன்னா, வினோத் சாகர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்தொகுப்பை பிரதீப் ராகவ் கையாண்டுள்ளார். இப்படத்தின் இயக்குநர் சுபாஷ் கே ராஜ், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

45
கருப்பு வசூல்

பிளாஸ்ட் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும் அதற்கு போட்டியாக சூர்யாவின் கருப்பு திரைப்படமும் தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது. ரிலீஸ் ஆகி 3 வாரங்களைக் கடந்தும் வெற்றிநடை போட்டு வரும் கருப்பு திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவே சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. பிளாஸ்ட் படம் பிக் அப் ஆனதால் கருப்பு வசூலில் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் தன்னுடைய ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது.

55
கருப்பு vs பிளாஸ்ட்

அதன்படி மூன்றாவது வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கருப்பு திரைப்படம் ரூ.5.15 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இது பிளாஸ்ட் பட வசூலை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. பிளாஸ்ட் திரைப்படம் அதன் 4-ம் நாளில் ரூ.6 கோடி வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கருப்பு, பிளாஸ்ட் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வந்துள்ளதால், கோலிவுட் வட்டாரமே செம சந்தோஷத்தில் உள்ளது. அதேபோல் தியேட்டர் உரிமையாளர்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் செம குஷியில் இருக்கிறார்களாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories