நடிகை ஸ்ரேயா சரண், 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டி போடும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில், இரண்டாவது நாயகியாக அறிமுகமானாலும், பின்னர் விஜய், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
27
தன்னுடைய திரைப்படங்களில் கவர்ச்சிக்கு வஞ்சகம் வைக்காமல் வளைத்து வளைத்து கிளாமர் காட்டி, கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக ரசிகர்களை கிளிகிளுப்பாக்கினார்.
கதை தேர்வு சரியாக இல்லாததாலும், வயது கூடியதாலும் மார்க்கெட் இழந்த ஸ்ரேயா... திடீர் என தன்னுடைய நீண்டநாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த, விளையாட்டு வீரரும், தொழிலதிபரான ஆண்ட்ரிவ் என்பவரை கடந்த 2018ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
47
சில மாதங்கள் கழித்தே தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்த ஸ்ரேயா, கொரோனா லாக் டவுன் சமயத்தில், ரகசியமாகவே குழந்தையையும் பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன பிறகே... வெளி உலகிற்கு குழந்தை பெற்றுக்கொண்ட தகவலை கூறினார். திருமணம் ஆகி குழந்தை பெற்றெடுத்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும், ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடவும் தவறுவது இல்லை.
67
அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஹாட் உடையில்... உள்ளாடை தெரியும் படி எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் ஸ்ரேயாவை பார்த்து ரசிகர்கள் பலர், இவருக்கு... 40 வயசு என சொன்னால் யார் நம்புவார்கள்... இளம் நடிகைகளுக்கே கவர்ச்சியில் கடுமையான டஃப் கொடுக்கிறார் என கூறி வருகிறார்கள்.