பைசன் முதல் நடு சென்டர் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் & வெப் சீரிஸ் முழு லிஸ்ட் இதோ

Published : Nov 17, 2025, 09:33 AM IST

நவம்பர் 17ந் தேதி முதல் நவம்பர் 21ந் தேதி வரை நெட்பிளிக்ஸ், ஜீ5, அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
This Week OTT Release Movies and Web Series

பைசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் தான் 'பைசன்'. கபடி வீரர் மனத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. திரையரங்குகளில் வெற்றி பெற்ற பைசன் திரைப்படம், வருகிற நவம்பர் 21ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

எ மேன் ஆன் தி இன்சைட் சீசன் 2

டெட் டான்சன் நடிக்கும் இந்த கிரைம் காமெடி சீசன் 2-ல், சார்லஸ் என்ற கதாபாத்திரம் கல்லூரி வளாகத்தில் ரகசிய உளவாளியாக நுழைந்து மர்மங்களை வெளிக்கொணர்கிறார். இது நவம்பர் 20 முதல் நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.

ஷாம்ப்பெயின் பிராப்ளம்ஸ்

மிங்கா கெல்லி, டாம் வோஸ்னிக்ஸ்கா மற்றும் திபால்ட் டி மொன்டலெம்பர்ட் நடித்த இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், நவம்பர் 19 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகிறது.

24
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

நடு சென்டர்

நரு நாராயணன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் நடு சென்டர். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கூடைப் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிக்குமார், ஆஷா சரத், கலையரசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் நவம்பர் 20ந் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

ஒன் ஷாட் வித் எட் ஷீரன்: எ மியூசிக் எக்ஸ்பீரியன்ஸ்

எட் ஷீரன் நியூயார்க் நகரில் ஒரு மணி நேரம் தொடர்ச்சியான லாங் ஷாட்டில் தனது ஹிட் பாடல்களைப் பாடும் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி, நவம்பர் 21 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பேக் டு பிளாக்

ஆங்கில பாடகி மற்றும் பாடலாசிரியர் ஏமி வைன்ஹவுஸின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இது, நவம்பர் 17 முதல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. மரிசா அபேலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

34
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

தி ஃபேமிலி மேன் சீசன் 3

மனோஜ் பாஜ்பாய் மீண்டும் ஸ்ரீகாந்த் திவாரியாக நடிக்கும் இந்த கிரைம் த்ரில்லர் சீரிஸின் புதிய சீசன், ஆக்‌ஷன் மற்றும் காமெடியுடன் வரவுள்ளது. இந்த சீசனில் ஜைதீப் அஹ்லாவத், நிம்ரத் கவுர் போன்ற புதிய நடிகர்கள் இணைந்துள்ளனர். பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த சீசன், நவம்பர் 21 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, பெனிசியோ டெல் டோரோ, சீன் பென் நடித்த இந்த அரசியல் டிராமா, பிரைம் வீடியோவில் ரெண்ட் முறையில் கிடைக்கிறது. இது ஆஸ்கர் பந்தயத்தில் உள்ள படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

லாஃப்டர் செஃப்ஸ் சீசன் 3

செஃப் ஹர்பால் சிங் சோகி மற்றும் பாரதி சிங் தொகுத்து வழங்கும் இந்த பிரபலங்களின் சமையல் நிகழ்ச்சியின் புதிய சீசன், நவம்பர் 22 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. தேஜஸ்வி பிரகாஷ், விவியன் டிசேனா, ஆயிஷா சிங், குர்மீத் சவுத்ரி, டெபினா பானர்ஜி போன்ற பல புதிய பிரபலங்கள் இந்த சீசனில் பங்கேற்கின்றனர்.

44
ஓடிடி ரிலீஸ் மூவீஸ் லிஸ்ட்

தி பெங்கால் ஃபைல்ஸ்

விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இப்படம், 1946ல் மேற்கு வங்கத்தில் நடந்த இந்து இனப்படுகொலையை அடிப்படையாகக் கொண்டது. மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் வெளியிட தடை செய்யப்பட்ட இப்படம், நவம்பர் 21 அன்று ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

லேண்ட் மேன் சீசன் 2

எண்ணெய் தொழில் பின்னணியில் பில்லி பாப் தார்ன்டன், அலி லார்ட்டர், ஜேக்கப் லோஃப்லாண்ட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த டிராமா, நவம்பர் 17 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தி ரோசஸ்

ஜே ரோச் இயக்கிய இந்த பிளாக் காமெடி படத்தில் பெனடிக்ட் கம்பெர்பேட்ச் மற்றும் ஒலிவியா கோல்மன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது நவம்பர் 20 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories