அதற்குள் ஹவுஸ்ஃபுல் ஆன தீபாவளி ரேஸ்.... பைசன் முதல் டீசல் வரை ஆத்தாடி இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?

Published : Aug 28, 2025, 09:33 AM IST

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அன்றைய தினம் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

PREV
16
Diwali Release Tamil Movies

தீபாவளி பண்டிகை என்றாலே புதுப்படங்களின் ரிலீசுக்கு பஞ்சமிருக்காது. வழக்கமாக தீபாவளிக்கு அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த டிரெண்ட் மாறி இருக்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. அதற்கு பதிலாக இளம் நடிகர்களின் படங்கள் போட்டி போட்டு வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கும் ஏராளமான இளம் நடிகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. அதன் முழு பட்டியலை பார்க்கலாம்.

26
பைசன்

இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் முதன்முதலில் இணைந்த படம் என்றால் அது துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் திரைப்படம் தான். அப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் ஒரு கபடி வீரனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக பா இரஞ்சித் தயாரித்து உள்ளார். இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.

36
டியூடு

இந்த ஆண்டு தீபாவளி பிரதீப் ரங்கநாதனுக்கு டபுள் தமாக்கா தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும். அவர் நடித்த இரண்டு படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதில் ஒன்று தான் டியூடு. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

46
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

அதே போல் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகின்றன. அப்படத்தை செவன் ஸ்கிரீன் மற்றும் ரெளடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கெளரி கிஷான், எஸ்.ஜே,சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

56
டீசல்

இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் டீசல். இதில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். அதூல்யா ரவி நாயகியாக நடிக்க, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேத்கர், சாகிர் உசேன், தங்கதுரை, கே.பி.ஒய். தீனா, அபூர்வா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான 'பீர் சாங்' நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்கண்டேயன் தயாரித்துள்ளார்.

66
கார்மேனி செல்வம்

தீபாவளி ரேஸில் இடம்பிடித்துள்ள மற்றொரு திரைப்படம் தான் ‘கார்மேனி செல்வம்’. இப்படத்தை ராம் சக்ரீ இயக்கி உள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனியும், கெளதம் மேனனும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தை அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ளார். யுவராஜ் தக்‌ஷன் ஒளிப்பதுவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெகன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories