Bison kaalamaadan Collection: விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகியுள்ள 'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பதித்துதுள்ளவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனராக அறிமுகமான 'பரியேறும் பெருமாள்' படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று, முதல் படத்திலேயே இவரது திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. இதை தொடர்ந்து இயக்கிய கர்ணன், வாழை, மாமன்னன், போன்ற படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன.
25
துருவை வைத்து இயக்கிய பைசன்:
இந்த நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, விக்ரம் மகன் துருவை ஹீரோவாக வைத்து, 'பைசன்' படத்தை இயக்குவதை மாரி செல்வராஜ் உறுதி செய்தார். இந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில்... கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வந்தது.
35
அனுபமாவுடன் காதல் கிசு கிசு:
'பைசன் காளமாடன்' படத்தில் துருவுக்கு ஜோடியாக, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒன்று சேர்ந்து நடித்ததன் மூலம் இருவருமே... உண்மையிலேயே காதலித்து வருவதாக… ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக இவர்களது முத்த புகைப்படம் ஒன்று வெளியானது. ஆனால் அனுபமா மற்றும் துருவ் இருவருமே இந்த சர்ச்சை குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை.
45
உண்மை கதையில் துருவ்:
கபடி விளையாட்டை மையப்படுத்தி... மனத்தி கணேசன் என்கிற விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன் போன்ற பலர் நடித்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் திரையரங்கில் ரிலீஸ் ஆனதில் இருந்தே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வசூலிலும் இப்படம் சிறந்த ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
55
பைசன் 2-ஆவது நாள் வசூல்:
இந்த திரைப்படம் இரண்டாவது நாளில், உலகளவில் ரூ. 12 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம், அர்ஜுன் ரெட்டி ரீமேக்காக எடுக்கப்பட்ட இரண்டு வெர்ஷனிலும் தோல்வியை தழுவிய நிலையில், அப்பாவுடன் நடித்த 'மஹா' படமும் படு பிளாப் ஆனது. ஆனால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள பைசன் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.